Enter your Email Address to subscribe to our newsletters
திருப்பதி, 16 செப்டம்பர் (ஹி.ச.)
தெலுங்கானா மாநிலத்தில் உண்ணி போல தோற்றமளிக்கும் ஒரு சிறிய பூச்சி கடியால் குழந்தைகள் அதிகளவில் பாதிக்கப்பட்டு வருகின்றனர்.
ஸ்க்ரப் டைபஸ் என்ற இந்த பூச்சி மக்களின் உயிரைப் பறிக்கும் அபாயம் உள்ளதாக தெரிவித்துள்ளனர். இது மக்களை அறியாமலேயே கடித்து அவர்களைகளை நோய்வாய்ப்படுத்துகிறது.
இது பெரும்பாலும் குழந்தைகளை பாதிக்கிறது. ஐதராபாத்தில் உள்ள தனியார் ஆஸ்பத்திரியில் கடந்த சில நாட்களாக ஸ்க்ரப் டைபஸ் காய்ச்சல் பாதிக்கப்பட்டவர்கள் அதிக அளவில் சிகிச்சை பெற்று வருகின்றனர். ஏற்கனவே சிலர் ஏற்கனவே ஐசியூவில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
ஸ்க்ரப் டைபஸ் பெரும் பாலும் மலைப்பாங்கான பகுதிகளில் காணப்படுகிறது. தற்போது ஸ்க்ரப் டைபஸ் அதிக அளவில் நகர மற்றும் கிராமப் பகுதிகளில் பரவி வருகிறது. அவைகள் பழைய படுக்கைகள், போர்வைகள், தலையணைகள், மெத்தைகள் மற்றும் இருண்ட குப்பை நிறைந்த பகுதிகளில் வாழ்கின்றன.
அது கடிக்கும்போது, ஒரு கரும்புள்ளி உருவாகி 7 நாட்கள் வரை காய்ச்சல் இருக்கும். டெங்குவைப் போலவே, கடுமையான தசை வலி, தலைவலி மற்றும் செரிமான பிரச்சினைகள் ஏற்படுகின்றன.
நோயாளியின் அறிகுறிகளைப் பொறுத்து இந்த நோய் எளிய நுண்ணுயிர் எதிர்ப்பிகளால் குணப்படுத்தப்படுகிறது. சில நேரங்களில் ஐசியு சிகிச்சை தேவைப்படுகிறது.
சிகிச்சையை தாமதப்படுத்துவது பல உறுப்புகள் செயலிழப்புக்கு வழிவகுக்கும் என்றும் நோயாளி கோமா நிலைக்குச் செல்லக்கூடும் என்றும் மருத்துவர்கள் எச்சரிக்கின்றனர்.
சுற்றுப்புறங்களை சுத்தம் செய்தல், பழைய படுக்கைகள், மெத்தைகள், தலையணைகள் போன்றவற்றை அகற்றுதல், குழந்தைகளின் கால்கள் மற்றும் கைகளை மறைக்கும் ஆடைகளை அணிவித்தல் ஆகியவை பூச்சி கடியைத் தடுக்க உதவும் என தெரிவித்துள்ளனர்.
Hindusthan Samachar / JANAKI RAM