Enter your Email Address to subscribe to our newsletters
தூத்துக்குடி, 16 செப்டம்பர் (ஹி.ச.)
தூத்துக்குடி மாவட்டத்தில் 18.9.2025 அன்று நடைபெறவுள்ள விவசாயிகள் குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில் அம்மாவட்ட விவசாயிகள் தவறாது கலந்து கொண்டு பயன்பெறுமாறு அம்மாவட்ட ஆட்சியர் அறிவுறுத்தியுள்ளார்.
இதுகுறித்து தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர் இளம்பகவத் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது,
2025-ம் ஆண்டு செப்டம்பர் மாதத்திற்கான விவசாயிகள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் 18.9.2025, வியாழக்கிழமை காலை 10 மணியளவில் தூத்துக்குடி மாவட்ட கலெக்டர் அலுவலகம் முத்து அரங்கத்தில்” வைத்து நடைபெற உள்ளது.
எனவே தூத்துக்குடி மாவட்ட விவசாயிகள் அனைவரும் இக்கூட்டத்தில் கலந்து கொண்டு விவசாயம் சம்பந்தபட்ட குறைகளைத் தெரிவித்து பயன்பெறலாம்.
இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.
Hindusthan Samachar / vidya.b