Enter your Email Address to subscribe to our newsletters
சென்னை, 16 செப்டம்பர் (ஹி.ச.)
கடந்த செப்டம்பர் 14 ஞாயிற்றுக்கிழமை அன்று சென்னை நேரு உள்விளையாட்டு அரங்கத்தில் நடைபெற்ற இட்லி கடை திரைப்படத்தின் இசை வெளியீட்டு விழாவில் ரசிகர்கள் தங்களிடம் அனுமதி பாஸ் இருந்தும் உள்ளே அனுமதிக்க வில்லை என்று வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.
இந்நிலையில் இதற்கு விளக்கம் அளிக்கும் வகையில் தனுஷ் ரசிகர் மன்றம் சார்பில் விளக்க கடிதம் ஒன்று வெளியிட்டுள்ளனர்.
அதில் தவிர்க்க முடியாத காரணத்தினாலும் பாதுகாப்பையும் நேரத்தையும் கருத்தில் கொண்டு ரசிகர்களை உள்ளே அனுமதிக்கவில்லை எனவும் அதற்கு வருத்தம் கேட்டுக் கொள்வதாகவும், இனிவரும் காலங்களில் மனவருத்தம் ஏற்படாத வகையில் நிகழ்ச்சிகளை சிறப்பாக நடத்துவோம் என்றும் தனுஷ் ரசிகர் மன்ற தலைவரும் இயக்குனருமான சுப்பிரமணிய சிவா உள்ளிட்டோர் குறிப்பிட்டுள்ளனர்
Hindusthan Samachar / P YUVARAJ