Enter your Email Address to subscribe to our newsletters
கன்னியாகுமரி, 16 செப்டம்பர் (ஹி.ச.)
நெடுஞ்சாலைத்துறை கட்டுமானம் மற்றும் பராமரிப்பு பணிகள் காரணமாக கன்னியாகுமாரி மாவட்டத்தின் குறிப்பிட்ட பகுதிகளுக்கு 10 தினங்களுக்கு குடிநீர் வினியோகம் இருக்காது என அம்மாவட்ட ஆட்சியர் அலுவலகம் அறிவித்துள்ளது.
இது தொடர்பாக கன்னியாகுமரி மாவட்ட ஆட்சியர் அலுவலகம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளதாவது,
நெடுஞ்சாலைத்துறை கட்டுமானம் மற்றும் பராமரிப்பு துறை மூலம் திங்கள்சந்தை-புதுக்கடை சாலை கி.மீ. 11/10ல் திக்கணங்கோடு சந்திப்பில் பாலம் கட்டும் பணி நடைபெறுவதால் அவ்வழியாக செல்லும் 79 வழியோர கடலோர கிராமங்களுக்கான கூட்டு குடிநீர் திட்டத்தின் 500 மி.மீ விட்டமுள்ள குடிநீர் குழாய் மாற்றியமைக்க
வேண்டியுள்ளது.
இதனால் அந்த குடிநீர் திட்டத்திலிருந்து குடிநீர் வினியோகம் செய்யப்படும் அகஸ்தீஸ்வரம், அஞ்சுகிராமம், தென்தாமரைக்குளம், கல்லுக்கூட்டம், மண்டைக்காடு, திங்கள்நகர், வெள்ளிமலை, கணபதிபுரம், புத்தளம் பேரூராட்சிகளுக்கும் மற்றும் கோவளம், லீபுரம், மகாராஜபுரம், பஞ்சலிங்கபுரம், முட்டம், ஆத்திக்காட்டுவிளை, தர்மபுரம், மணக்குடி, பள்ளம், ராஜாக்கமங்கலம், திக்கணங்கோடு ஆகிய ஊராட்சிகளுக்கும் 10 தினங்களுக்கு குடிநீர் வினியோகம் இருக்காது.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
Hindusthan Samachar / vidya.b