பெரியாரின் பிறந்தநாளுக்கு தவெக நிர்வாகிகள் மாலை அணிவித்து மரியாதை செலுத்த வேண்டும்
சென்னை, 16 செப்டம்பர் (ஹி.ச.) பெரியாரின் பிறந்தநாளுக்கு அனைத்து மாவட்ட நிர்வாகிகளும் மாலை அணிவிக்கும் மலர் தொகை மரியாதை செலுத்த வேண்டும் என்று தமிழக வெற்றிக் கழகம் சார்பில் அறிவுறுத்தப்பட்டுள்ளது. இது தொடர்பாக அவர்கள் எக்ஸ் தளத்தில் பதிவிட்டுள்ளதாவ
Tweet


சென்னை, 16 செப்டம்பர் (ஹி.ச.)

பெரியாரின் பிறந்தநாளுக்கு அனைத்து மாவட்ட நிர்வாகிகளும் மாலை அணிவிக்கும் மலர் தொகை மரியாதை செலுத்த வேண்டும் என்று தமிழக வெற்றிக் கழகம் சார்பில் அறிவுறுத்தப்பட்டுள்ளது.

இது தொடர்பாக அவர்கள் எக்ஸ் தளத்தில் பதிவிட்டுள்ளதாவது,

நம் கொள்கைத் தலைவர் தந்தை பெரியாரின் பிறந்த நாளை முன்னிட்டு நாளை காலை 10.00 மணி அளவில், அனைத்துக் கழக மாவட்டங்களிலும் மாவட்ட, நகர, ஒன்றிய, பேரூர் மற்றும் கிளைக் கழக நிர்வாகிகள் அனைவரும் தந்தை பெரியார் அவர்களின் திருவுருவப் படத்திற்கு மலர் தூவி மரியாதை செலுத்த வேண்டும் என வெற்றித் தலைவர் அவர்களின் ஒப்புதலோடு தெரிவித்துக்கொள்கிறேன் என்று அந்த பதிவில் அவர் குறிப்பிட்டுள்ளார்.

Hindusthan Samachar / P YUVARAJ