Enter your Email Address to subscribe to our newsletters
கோவை, 16 செப்டம்பர் (ஹி.ச.)
கோவை மாவட்டத்தில் நகை கொள்ளை, மொபைல்போன் திருட்டு, போதைப்பொருட்கள் விற்பனை, பைக் திருட்டு உள்ளிட்ட, குற்றங்கள் அதிகளவில் நடைபெறுகின்றன.
குறிப்பாக பைக் திருடும் ஆசாமிகள் பதிவு எண்ணை மாற்றி, புதிய நம்பர் பிளேட்டை பொருத்தி விடுகின்றனர். இதன் காரணமாக, திருடப்பட்ட பைக்குகளை கண்டறிவது கடினமாகிறது.
சில குற்றவாளிகள், திருடிய பைக்குகளின் பாகங்களை கழட்டி, வேறு பைக்குகளின் பாகங்களுடன் பொருத்தி, புதிய பைக்குகளை உருவாக்கி விடுகின்றனர். இதை தடுக்க, வாகனத் தணிக்கையின்போது, பைக்குகளின் பதிவு எண்ணை கொண்டு, அசல் பைக்கை கண்டறிய திட்டமிட்டுள்ளனர்.
இது குறித்து கோவை மாவட்ட காவல்துறை அதிகாரிகள் கூறியதாவது:
வாகன தணிக்கையின்போது, வாகனங்களின் பதிவு விபரங்களை பிரதானமாக சோதனை செய்ய அறிவுறுத்தப்பட்டுள்ளது.
வாகன பதிவு எண்ணை, அதற்கான செயலியால் சோதிக்கும்போது, பைக் தயாரிப்பு நிறுவனம், மாடல், நிறம் உள்ளிட்ட விவரம் தெரிய வரும். அதன் மூலம், பதிவு எண் மாற்றப்பட்ட பைக்குகளை எளிதில் கண்டறியலாம்.
வாகனத்தின் நிறம், இன்ஜின், சேஸ் எண் உள்ளிட்டவை வாயிலாக, திருட்டு வாகனத்தை எளிதில் கண்டறியலாம்.
இவ்வாறு அவர்கள் கூறினார்.
Hindusthan Samachar / vidya.b