சைவ - வைணவ சமயங்கள், பெண்கள் குறித்து வெறுப்பு பேச்சு பேசியதற்கு எதிராக பேசிய விவகாரம் உயர்நீதிமன்றமே வழக்கை முடித்து வைத்தது
சென்னை, 16 செப்டம்பர் (ஹி.ச.) முன்னாள் அமைச்சர் பொன்முடிக்கு எதிராக தனி நபர் புகார் தாக்கல் செய்து கொள்ளலாம் எனவும் புகார்களை காவல்துறையினர் முடித்து வைத்ததை எதிர்த்து சம்பந்தப்பட்ட மாஜிஸ்திரேட் நீதிமன்றத்தில் வழக்கு தொடரலாம் உயர்நீதிமன்றம் தெரிவித்
Ponmudi


சென்னை, 16 செப்டம்பர் (ஹி.ச.)

முன்னாள் அமைச்சர் பொன்முடிக்கு எதிராக தனி நபர் புகார் தாக்கல் செய்து கொள்ளலாம் எனவும் புகார்களை காவல்துறையினர் முடித்து வைத்ததை எதிர்த்து சம்பந்தப்பட்ட மாஜிஸ்திரேட் நீதிமன்றத்தில் வழக்கு தொடரலாம் உயர்நீதிமன்றம் தெரிவித்தது.

பொன்முடிக்கு எதிராக தனிநபர் புகார் தாக்கல் செய்யப்பட்டுள்ளது என புகார்தாரர்கள் தரப்பு தெரிவித்தனர்.

பொறுப்பான பதவியில் இருந்த பொன்முடி, இதுபோன்ற பேச்சை தவிர்த்து இருக்க வேண்டும் எனவும் காவல்துறை குறைந்தபட்சம் புகார் அளித்தவர்களிடம் முறையான விசாரணை நடத்தி இருக்க வேண்டும்

உயர்நீதிமன்றம் தெரிவித்தது.

Hindusthan Samachar / P YUVARAJ