கூட்டுறவு சங்கத்தில் நவராத்திரி கொலு பொம்மைகள் விற்பனை தொடக்கம்
சிவகங்கை, 16 செப்டம்பர் (ஹி.ச.) புரட்டாசி மாதம் அமாவாசைக்கு அடுத்த நாள் தொடங்கி ஒன்பது நாட்கள் நவராத்திரி விழா கொண்டாடப்படுகிறது. இந்த ஆண்டு நவராத்திரி விழா புரட்டாசி மாதம் 6-ம் நாள் (22.9.2025) அன்று ஆரம்பமாகிறது. அதன்படி செப்.22 ம் தேதி துவங
கூட்டுறவு சங்கத்தில் நவராத்திரி கொலு பொம்மைகள்  விற்பனை தொடக்கம்


சிவகங்கை, 16 செப்டம்பர் (ஹி.ச.)

புரட்டாசி மாதம் அமாவாசைக்கு அடுத்த நாள் தொடங்கி ஒன்பது நாட்கள் நவராத்திரி விழா கொண்டாடப்படுகிறது. இந்த ஆண்டு நவராத்திரி விழா புரட்டாசி மாதம் 6-ம் நாள் (22.9.2025) அன்று ஆரம்பமாகிறது.

அதன்படி செப்.22 ம் தேதி துவங்க உள்ள நவராத்திரி விழா தொடர்ந்து ஒன்பது நாட்கள் நடைபெறும். அன்றைய தினம் முதல் இல்லங்களிலும், ஆலயங்களிலும் கொலு வைக்கத் தொடங்குவர். 30.9.2025 அன்று துர்க்காஷ்டமி, 1.10.2025 அன்று சரஸ்வதி பூஜை, 2.10.2025 அன்று விஜயதசமி நிகழ்வோடு நவராத்திரி முடிவடைகிறது.

பெரும்பாலான வீடுகளிலும், கோயில்களிலும் கொலு அமைக்கப்பட்டு சுவாமி சிலைகள், திருப்பதி பிரம்மோற்ஸவ சிலை, அர்த்தநாரீஸ்வரர், சங்கரநாராயணன், அழகர் சுவாமி, மீனாட்சி சுந்தரரேஸ்வரர், தலைவர்கள், தியாகிகள் சிலைகள், பறவைகள் மற்றும் விலங்கு பொம்மைகள், ஆண்டாள் பொம்மைகள் என பல்வேறு விதமான பொம்மைகள் வைக்கப்பட்டு தினந்தோறும் பூஜை நடைபெறும்.

இதற்காக சிவகங்கை மாவட்டத்தில் உள்ள மானாமதுரை மண்பாண்ட கூட்டுறவு சங்கத்தில் ஆயிரக்கணக்கான கொலு பொம்மைகள் விற்பனைக்கு வைக்கப்பட்டுள்ளது.

பல்வேறு ஊர்களிலிருந்து ஏராளமானோர் வந்து கொலு பொம்மைகளை ஆர்வமுடன் வாங்கிச் செல்கின்றனர்.

Hindusthan Samachar / vidya.b