Enter your Email Address to subscribe to our newsletters
டேராடூன் , 17 செப்டம்பர் (ஹி.ச.)
இமயமலை மாநிலங்களான உத்தரகண்ட் மற்றும் இமாச்சலப் பிரதேசத்தில் மேக வெடிப்புகள் மற்றும் நிலச்சரிவுகள் புதிய துயரங்களை கட்டவிழ்த்துவிட்டன, தற்போது சுமார் 18 பேர் உயிரிழந்திருப்பதாகவும், 20 பேர் காணாமல் போயினர் மற்றும் நூற்றுக்கணக்கானோர் சிக்கித் தவித்து வருவதாக தகவல் வெளியாகியுள்ளது.
இந்த வாரம் பெய்த புதிய கனமழையால் ஆறுகள் கரையோரங்களில் நிரம்பி வழிந்தன, அதே நேரத்தில் வீடுகள் தரைமட்டமாகின, சாலைகள் அடைக்கப்பட்டன, வாகனங்களை அடித்து செல்லப்பட்டது.
மேலும், கடந்த மாத வெள்ள சீற்றத்தின் போது, அடித்துச் செல்லப்பட்ட மற்றும் பாதிக்கப்பட்ட தங்களது உடமைகளை மீட்க மக்கள் முயன்ற போது, மீண்டும் பெர்ய்த மழையால் பேரழிவு ஏற்பட்டது.
இரவு முழுவதும் கனமழை பெய்த உத்தரகாண்டில், 15 பேர் கொல்லப்பட்டனர் மற்றும் 16 பேர் இன்னும் காணாமல் போயுள்ளதாக மாநில அதிகாரிகள் தெரிவித்தனர். NDRF, SDRF மற்றும் தீயணைப்புப் படையினரால் மீட்கப்படுவதற்கு முன்பு 900 க்கும் மேற்பட்டோர் வெவ்வேறு இடங்களில் சிக்கித் தவித்ததாக மாநில அவசரகால செயல்பாட்டு மையம் தெரிவித்துள்ளது.
Hindusthan Samachar / J. Sukumar