பொது இடங்களில் உள்ள கொடிக்கம்பங்களை அகற்ற கோரிய வழக்கு - வழிகாட்டி விதிமுறைகளை வகுத்துள்ள தமிழக அரசுக்கு நீதிமன்றம் பாராட்டு
சென்னை, 17 செப்டம்பர் (ஹி.ச.) பொது இடங்கள், மாநில, தேசிய சாலைகள், உள்ளாட்சிக்கு சொந்தமான இடங்களில் உள்ள அரசியல் கட்சிகள், சாதி, மத அமைப்புகள் மற்றும் சங்கங்களின் கொடிக் கம்பங்கள் அகற்ற கோரிய வழக்கு விசாரணைக்கு சென்னை காஞ்சிபுரம் திருவள்ளூர் செ
பொது இடங்களில் உள்ள கொடிக்கம்பங்களை அகற்ற கோரிய வழக்கு - வழிகாட்டி விதிமுறைகளை வகுத்துள்ள தமிழக அரசுக்கு நீதிமன்றம் பாராட்டு


சென்னை, 17 செப்டம்பர் (ஹி.ச.)

பொது இடங்கள், மாநில, தேசிய சாலைகள், உள்ளாட்சிக்கு சொந்தமான இடங்களில் உள்ள அரசியல் கட்சிகள், சாதி, மத அமைப்புகள் மற்றும் சங்கங்களின் கொடிக் கம்பங்கள் அகற்ற கோரிய வழக்கு விசாரணைக்கு சென்னை காஞ்சிபுரம் திருவள்ளூர் செங்கல்பட்டு மாவட்டங்களின் ஆட்சியர்கள் இன்று(செப் 17) சென்னை உயர் நீதிமன்றத்தில் நேரில் ஆஜர் ஆனார்கள்.

இவ்வழக்கு விசாரணையின் போது அரசியல் கட்சிகள் சார்பில் நடத்தப்படும் நிகழ்ச்சிகளுக்கு சாலை நடுவில் உள்ள செண்டர் மீடியன் பகுதிகளில் கொடிக்கம்பங்கள் அமைக்க கூடாது என தமிழக அரசு சார்பில் வாதம் முன்வைக்கப்பட்டது.

விசாரணையின் இறுதியில் கொடிக்கம்பங்கள் அமைப்பது தொடர்பாக அரசாணை, வழிகாட்டி விதிமுறைகளை வகுத்துள்ள தமிழக அரசுக்கு பாராட்டு தெரிவித்த சென்னை உயர் நீதிமன்றம் இந்த கட்டுப்பாடுகள் ஆளுங்கட்சி உள்ளிட்ட அனைத்து அரசியல் கட்சிகளுக்கும் பொருந்தும்படி பின்பற்ற வேண்டும் என உத்தரவிட்டது.

விதிமுறைகளை அமல்படுத்தாவிட்டால், சம்பந்தப்பட்ட அதிகாரிக்கு எதிராக நீதிமன்ற அவமதிப்பு நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் சென்னை உயர்நீதிமன்றம் எச்சரிக்கை விடுத்து வழக்கின் விசாரணை அக்டோபர் 15 ம் தேதிக்கு ஒத்திவைத்து.

Hindusthan Samachar / vidya.b