தகுதி தேர்வு தொடர்பாக ஆசிரியர்கள் அச்சம் கொள்ள தேவையில்லை,  சட்ட போராட்டத்தில் வெற்றி பெறுவோம் - அமைச்சர் அன்பில் மகேஷ்
கோவை, 17 செப்டம்பர் (ஹி.ச.) கோவை, காளபட்டி பகுதி தனியார் சர்வதேச பாடத் திட்டம் பள்ளிக் கட்டிடத் திறந்து வைத்த தமிழக பள்ளி கல்வி துறை அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி பின்னர் செய்தியாளர்களை சந்தித்தார் அப்பொழுது அவர் பேசும்போது : ஆசிரியர் தகுதி த
அன்பில் மகேஷ்


கோவை, 17 செப்டம்பர் (ஹி.ச.)

கோவை, காளபட்டி பகுதி தனியார் சர்வதேச பாடத் திட்டம் பள்ளிக் கட்டிடத் திறந்து வைத்த தமிழக பள்ளி கல்வி துறை அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி பின்னர் செய்தியாளர்களை சந்தித்தார் அப்பொழுது அவர் பேசும்போது :

ஆசிரியர் தகுதி தேர்வு வருகிற 19 ஆம் தேதி விசாரணைக்கு வர உள்ளதாகவும், ஏற்கனவே மனு தாக்கல் என்பது அதில் என்ன கூறப்பட்டு உள்ளது என்பது கூறியதாகவும், உறுதியான அடித்தளம் உள்ளதாகவும், இது போன்ற சட்டங்கள் வருவதற்கு முன்பாகவே, வேலைவாய்ப்பு மூலமாகவே, தேர்வு செய்யப்பட்டு பணிகள் அமர்த்தப்பட்டு இருக்கின்ற ஆசிரியர்கள் இது பொருந்தும் என்று கூறுவது எந்த விதத்தில் சரியாக இருக்கும் என்பது தெரியவில்லை என்றும், இதுபோல் உறுதியான நிலைபாடு இருப்பதால் National Council for Teacher Education (என்.சி.டி.இ) முறையில் கூறப்படுவது கட்டுப்படுத்தப்பட்ட முறையில் வராது என்றவர், இந்த சட்டம் நடைமுறை வந்த பிறகு வந்தவர்களுக்கு மட்டும் தான் அந்த சட்டத்தில் உள்ளதாகவும், அதன் அடிப்படையில் வெற்றி பெறுவோம் என்றவர், ஆசிரியர்கள் அச்சப்படத் தேவையில்லை என்றவர், எங்களுடைய ஆசிரியர்கள் நீங்கள் , தமிழக ஆசிரியர்கள் நாங்கள் பாதுகாக்காமல் வேறு யாரு ? பாதுகாப்பார்கள் என்றவர், யாரும் பயப்படத் தேவையில்லை உங்கள் பணி நீங்கள் நிம்மதியாக செய்ய வேண்டும் என்றார்.

பகுதி நேர ஆசிரியர்கள் தலைமைச் செயலாளர் மூலம் துறை ரீதியான கூட்டத்தை நடத்தி முடித்ததாகவும், பகுதி நேர ஆசிரியர்கள் சார்ந்து ஆலோசனைகள் பெறப்பட்டதாக கூறியவர், அவர்கள் கூறிய ஆலோசனையில் எது பொருத்தமாக உள்ளதோ, அதையும் செலுத்தி அவர்களையும் சீக்கிரமாக, எடுக்க முடியுமோ ? எடுத்துக் கொள்வதாகவும், அவர்களுக்கு பெயர் தான் பகுதி நேர ஆசிரியர்கள், முழுமையாக தங்களுடைய பணியை செய்பவர்கள் என்றவர், ஏனென்றால் அவர்களும் அனுபவம் வாய்ந்தவர்களாக இருக்கின்றார்கள் என்றவர், அவர்களை பயன்படுத்துவது இன்னும் எங்களுடைய கரத்தை பலப்படுத்தும் விதமாக இருக்கும் என்றார்.

அன்புக் கரங்கள் திட்டம் பெருமையாக உள்ளதாகவும், ஒட்டுமொத்த தமிழகத்திலும் சுமார் 6,500 பேர் தங்கள் பெற்றவர்களில் ஒருவரை இழந்து இருந்தாலும் கூட, அவர்கள் கல்வியை ஒரு தடையாக இருந்து விடக் கூடாது என பராமரிக்கிறவர்களுக்கும் ஒரு கஷ்டம் இருக்கும், அதை ஏற்றுக்கொள்ள வேண்டும், அதை அரசாங்கமே ஏற்றுக் கொள்ள வேண்டும் என்பதற்காகத் தான் அந்தந்த மாவட்ட ஆட்சியர் மூலமாக பெறப்பட்ட கணக்கின் அடிப்படையில் மாதம், மாதம் 2,000 ரூபாய் அந்த குழந்தைகளுக்கு 18 வயது இருக்கும் வரைக்கும் வழங்கப்படும் என்றவர், கல்விக்காக மட்டும் கவனம் செலுத்த வேண்டும், மற்றதை நாங்கள் பார்த்துக் கொள்கிறோம் என்று தமிழக முதல்வர் கூறி உள்ளார். அந்தக் குழந்தைகளுக்கு பன்னிரண்டாம் வகுப்பு முடித்து கல்லூரிக்கு செல்லும் போது அல்லது திறன் வளர்ச்சி மேம்படுத்துவதற்கும் அரசு துணை நிற்கும் என்று முதல்வர் கூறி உள்ளார் என்றார்.

தமிழக வெற்றி கழகம் தி.மு.க வை குறி வைக்கிறதாக நிருபர்கள் எழுப்பிய கேள்விக்கு,

அது வேண்டாம் என்று கூறி விட்டுச் சென்றார்.

Hindusthan Samachar / Durai.J