Enter your Email Address to subscribe to our newsletters
தேனி , 17 செப்டம்பர் (ஹி.ச.)
தமிழ்நாடு மாநில ஊரக வாழ்வாதார இயக்கம் சார்பில், மாநில அளவில் மகளிர் சுயஉதவிக் குழுக்களுக்கு வங்கி கடனுதவி வழங்கும் விழா, சேலத்தில் துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் அவர்களால் தொடங்கி வைக்கப்பட்டது.
அதன் ஒரு பகுதியாக, தேனி மாவட்டத்தில் உள்ள 820 மகளிர் சுயஉதவிக் குழுக்களுக்கு, ரூ.64.74 கோடி மதிப்பிலான வங்கி கடன் உதவிகள் மற்றும் அடையாள அட்டைகள் வழங்கப்பட்டன.
தேனி மாவட்ட ஆட்சியர் அலுவலகக் கூட்ட அரங்கில், மாவட்ட ஆட்சியர் ரஞ்ஜீத் சிங் தலைமையில் நடைபெற்ற இந்த நிகழ்ச்சியில்,
தேனி நாடாளுமன்ற உறுப்பினர் தங்க தமிழ்செல்வன், பெரியகுளம் சட்டமன்ற உறுப்பினர் கே.எஸ்.சரவணக்குமார் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
820 மகளிர் சுயஉதவிக் குழுக்களைச் சேர்ந்த 8,105 உறுப்பினர்களுக்கு, ரூ.64.74 கோடி மதிப்பிலான பல்வேறு வகையான கடன்கள் வழங்கப்பட்டன. வங்கிக் கடனாக 303 குழுக்களுக்கு ரூ.36 கோடி. சமுதாய முதலீட்டு நிதிக் கடனாக 260 குழுக்களுக்கு ரூ.3.90 கோடி. சுழல் நிதிக் கடனாக 2 குழுக்களுக்கு ரூ.30,000. வட்டார வணிக வள மையக் கடனாக 60 உறுப்பினர்களுக்கு ரூ.30 லட்சம்.
தொழிற்கடனாக 106 உறுப்பினர்களுக்கு ரூ.1.44 கோடி. சுயவேலைவாய்ப்புத் திட்டக் கடனாக 249 குழுக்களுக்கு ரூ.23.05 கோடி ஆகிய கடன்கள் வழங்கப்பட்டன.
நிகழ்ச்சியில், 2024-2025-ஆம் ஆண்டிற்கான மாவட்ட அளவில் சிறந்த வங்கிகளுக்கும், அதிகாரிகளுக்கும் விருதுகள் வழங்கப்பட்டன.
இந்தியன் வங்கி அதிக கடனுதவி வழங்கிய வங்கிகள் விபரம், முதல் பரிசு பெரியகுளம் கனரா வங்கி (ரூ.15,000, இரண்டாம் பரிசு கடமலைக்குண்டு இந்தியன் வங்கி (ரூ.10,000), மூன்றாம் பரிசு கடமலைக்குண்டு கனரா வங்கி (ரூ.5,000), சிறந்த ஒருங்கிணைப்பு இணைப் பதிவாளர் (கூட்டுறவுத் துறை) மற்றும் முன்னோடி வங்கி மேலாளர் ஆகியோருக்குச் சிறந்த ஒருங்கிணைப்புப் பணிக்காகக் கேடயங்கள் மற்றும் நற்சான்றிதழ்கள் வழங்கப்பட்டன.
பெண்களின் பொருளாதார மேம்பாட்டை உறுதி செய்வதற்காக, முன்னாள் முதலமைச்சர் கலைஞர் அவர்களால் 1989-இல் தொடங்கப்பட்ட சுயஉதவிக் குழுக்கள், இன்று முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்களின் வழிகாட்டுதலின் கீழ் மேலும் வலுப்படுத்தப்பட்டு வருகின்றன.
நிகழ்வில் தேனி அல்லிநகரம் நகர்மன்றத் தலைவர் ரேணுபிரியா பாலமுருகன், பெரியகுளம் நகர்மன்றத் தலைவர் சுமிதா சிவக்குமார், போடிநாயக்கனூர் நகர்மன்றத் தலைவர் ராஜராஜேஸ்வரி சங்கர், திட்ட இயக்குநர் (மகளிர் திட்டம்) உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர்.
Hindusthan Samachar / J. Sukumar