புரோ கபடி லீக் - பெங்களூர் புல்ஸ் அணியை வீழ்த்தி தமிழ் தலைவாஸ் வெற்றி
ஜெய்ப்பூர் , 17 செப்டம்பர் (ஹி.ச.) 12 வது புரோ கபடி லீக் தொடர் ஜெய்ப்பூரில் நடைபெற்றுவருகிறது. 12 அணிகள் பங்கேற்றுள்ள இத்தொடரின் நேற்றைய லீக் போட்டியில் தமைழ் தலைவாஸ் - பெங்களூர் புல்ஸ் அணிகள் மோதின. ஆட்டத்தின் முதல் பாதி முடிவில், பெங்களூரு புல்ஸ்
புரோ கபடி லீக் - பெங்களூர் புல்ஸ் அணியை வீழ்த்தி தமிழ் தலைவாஸ் வெற்றி


ஜெய்ப்பூர் , 17 செப்டம்பர் (ஹி.ச.)

12 வது புரோ கபடி லீக் தொடர் ஜெய்ப்பூரில் நடைபெற்றுவருகிறது. 12 அணிகள் பங்கேற்றுள்ள இத்தொடரின் நேற்றைய லீக் போட்டியில் தமைழ் தலைவாஸ் - பெங்களூர் புல்ஸ் அணிகள் மோதின.

ஆட்டத்தின் முதல் பாதி முடிவில், பெங்களூரு புல்ஸ் அணி 20-14 என்ற கணக்கில் முன்னிலை வகித்த நிலையில், இரண்டாம் பாதியில், தமிழ் தலைவாஸ் அணி தனது அதிரடியான விளையாட்டால், பெங்களூர் புல்ஸ் அணியை வீழ்த்தி வெற்றி பெற்றது. இந்த வெற்றிக்கு தமிழ அணியின் அர்ஜுன் தேஷ்வாவின் ‘சூப்பர் 10’அணியின் வெற்றிக்கு முக்கிய பங்கு வகித்தது.

முன்னதாக நேற்று இரவு 8 மணிக்கு தொடங்கி நடந்த போட்டியில் சிறப்பாக ஆடிய பெங்கால் வாரியர்ஸ் அணி 41-37 புள்ளிக்கணக்கில் உ.பி.யோத்தாஸ் அணியை வீழ்த்தி வெற்றி பெற்றது.

Hindusthan Samachar / J. Sukumar