Enter your Email Address to subscribe to our newsletters
கரூர், 17 செப்டம்பர் (ஹி.ச.)
தந்தை பெரியாரின் 147 ஆவது பிறந்த நாளை முன்னிட்டு தமிழக துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் இன்று(செப் 17) கரூர் மாவட்ட ஆட்சி தலைவர் அலுவலகத்தில் தந்தை பெரியாரின் திருவுருவப்படத்திற்கு மலர் தூவி மரியாதை செலுத்தினார்.
மேலும் கரூர் மாவட்ட ஆட்சித் தலைவர் அலுவலகத்தில் அரசு அலுவலர்கள் மற்றும் பணியாளர்கள் சமூக நீதி நாள் உறுதிமொழி ஏற்றுக்கொண்டனர்.
இந்நிகழ்வில் சட்டமன்ற உறுப்பினர்கள் மாணிக்கம், இளங்கோ, சிவகாமசுந்தரி, மாநகராட்சி மேயர் கவிதா, மாவட்ட ஆட்சி தலைவர் தங்கவேல், மாவட்ட வருவாய் அலுவலர் கண்ணன், மாநகராட்சி ஆணையர் சுதா மற்றும் அரசு அலுவலர்கள் ஆகியோர் கலந்து கொண்டனர்.
Hindusthan Samachar / vidya.b