Enter your Email Address to subscribe to our newsletters
கோவை, 17 செப்டம்பர் (ஹி.ச.)
பாரத பிரதமரின் பிறந்த நாளை முன்னிட்டு கோவை புலியகுளம் பகுதியில் மகளிர்காண மருத்துவ முகாமினை பா.ஜ.க எம்.எல்.ஏ வானதி சீனிவாசன் துவக்கி வைத்து செய்தியாளர்களை சந்தித்தார்.
அப்போது பேசிய அவர்,
அரசியல் என்றால் சேவை என்ற மனப்பான்மையோடு பாரதிய ஜனதா கட்சி செயல்பட்டு வருவதாகவும் பாரத பிரதமரின் பிறந்த நாளை முன்னிட்டு கோவில்களை சிறப்பு பூஜை அண்டதானம் நடைபெற்று வருவதாகவும் தெரிவித்த அவர் ஏற்கனவே ரத்த தானத்தில் சாதனை படைத்து உள்ள நாங்கள் மீண்டும் இந்த ஆண்டு ரத்ததானம் அதிகமாக கொடுத்து அந்த சாதனை முறியடிக்க உள்ளோம் என தெரிவித்தார்.
தொடர்ந்து செய்தியாளர்கள் கேள்விக்கு பதில் அளித்த அவர்,
பிரதமர் நரேந்திர மோடியின் பிறந்த நாள் பரிசாக அரசியல் ரீதியாக இரட்டை இலக்க பா.ஜ.க சட்டமன்ற உறுப்பினர்கள் சட்டப் பேரவையில் இருப்பார்கள், அதற்கான உறுதி மொழியை இன்று ஏற்கிறோம் என்ற அவர் , எதிர்க்கட்சித் தலைவர் கூட்டணி கட்சி தலைவர்களை எங்க கட்சி தலைவரை தான் பார்க்கிறார்கள் மற்ற கட்சி தலைவர்களை பார்க்க வில்லை , அதில் சந்தோஷம் தான் என்றார்.
மேலும் ஒருவர் பச்சை பேருந்து செல்கிறார், ஒருவர் மஞ்சள் பேருந்தில் செல்கிறார், கடைசியில் அவர்களை பிங்க் பஸ் ஓவர் டேக் செய்துவிடும் என துணை முதல்வர் பேசிய தொடர்பான கேள்விக்கு,
பிக் பஸ் மூலம் மகளிரை ஏமாற்றலாம் என துணை முதல்வர் நினைக்கிறார். அவர் முதலில் பிங்க் பெயிண்ட் அடிப்பதால் பிங்க் பஸ் ஆகிவிடாது அதனை துணை முதல்வர் நேரில் பார்க்க வேண்டும், பெரும்பாலான இடங்களில் பிங்க் பாஸ் வருவதில்லை, பாதியில் நின்று விடுகிறது பெண்கள் தி.மு.க வுக்கு ஓட்டு போட மாட்டார்கள் என்பதை அவர் புரிந்து கொள்ள வேண்டும் என்றார்.
மேலும் ஆசிரியர் தகுதி தேர்வு தொடர்பான கேள்விக்கு,
தேர்வும் நடத்துவோம் நீதிமன்றத்தில் தடையும் வாங்குவோம் என்றால் அதற்கு எதற்கு தேர்ந்தெடுக்கப்பட்ட அரசு , அரசு எதற்காக இது போன்ற வழக்குகள் வருகின்றன அதற்கான வழிகாட்டு நெறிமுறைகளை வகுத்து முறையாக தேர்வுகளை நடத்த வேண்டும் , தி.மு.க அரசு போலவே தேர்வும் இருக்கிறது என விமர்சித்தார்.
Hindusthan Samachar / Durai.J