எதிர்க்கருத்தை ஏற்றுக்கொள்ள மனமின்றி திமுக குண்டர்களை ஏவி தாக்குவது கடும் கண்டனத்திற்குரியது - அதிமுக
சென்னை, 10 ஜனவரி (ஹி.ச.) தனியார் தொலைக்காட்சி விவாதத்தில் ஈடுபட்ட பாஜக தொண்டர்களை, திமுக குண்டர்களை அழைத்து வந்து தாக்குதலில் ஈடுபட்டுள்ளது கடும் கண்டனத்திற்குரியது என அதிமுக சார்பில் கண்டன பதிவு வெளியிடப்பட்டுள்ளது. இது தொடர்பாக அந்த பதிவில் குற
Admk


Tw


சென்னை, 10 ஜனவரி (ஹி.ச.)

தனியார் தொலைக்காட்சி விவாதத்தில் ஈடுபட்ட பாஜக தொண்டர்களை, திமுக குண்டர்களை அழைத்து வந்து தாக்குதலில் ஈடுபட்டுள்ளது கடும் கண்டனத்திற்குரியது என அதிமுக சார்பில் கண்டன பதிவு வெளியிடப்பட்டுள்ளது.

இது தொடர்பாக அந்த பதிவில் குறிப்பிடப்பட்டுள்ளதாவது,

சென்னையில் நடைபெற்ற தனியார் தொலைக்காட்சி நிகழ்வில், பத்திரிக்கையாளர் என்ற பெயரில் திரியும் திமுக கொத்தடிமையான செந்தில்வேல் என்பவரின் கருத்துக்கு எதிர்க்கருத்து தெரிவித்த பாஜக தொண்டர்களை, வெளியில் இருந்து திமுக குண்டர்களை அழைத்து வந்து தாக்குதலில் ஈடுபட்டுள்ளது கடும் கண்டனத்திற்குரியது.

எதிர்க்கருத்தை ஏற்றுக்கொள்ள மனமின்றி குண்டர்களை ஏவி, அதையும் ஒரு அமைச்சராக இருக்கக் கூடிய சேகர் பாபுவின் பெயரால் இப்படி ஒரு தாக்குதல் நடத்தியிருப்பது, திமுக எப்படிப்பட்ட கீழ்த்தரமான அரசியலுக்கு இறங்கிவிட்டது என்பதை காட்டுகிறது.

அதிகார மமதையில் அராஜகம் செய்யும் குண்டர்களின் கூடாரமான திமுக-விற்கு உரிய பாடத்தை தமிழக மக்கள் புகட்டுவார்கள் என்று அவர் அந்த பதிவில் குறிப்பிட்டுள்ளார்.

Hindusthan Samachar / P YUVARAJ