Enter your Email Address to subscribe to our newsletters

சென்னை, 10 ஜனவரி (ஹி.ச)
சென்னை கொளத்தூரில் பொங்கல் விழாவை ஒட்டி தமிழ்நாடு முதலமைச்சர் மு க ஸ்டாலின் பல்வேறு நிகழ்ச்சிகளில் பங்கேற்று பொங்கல் பரிசுகளை வழங்கினார்.
முதலில் கொளத்தூர் சட்டமன்றத் தொகுதி அலுவலகத்திற்கு முன்பாக நடைபெற்ற பொங்கல் விழாவில் பங்கேற்று பொங்கல் பரிசுகளை வழங்கினார்.
முதலமைச்சரும், துர்கா ஸ்டாலினும் இணைந்து பசு மற்றும் கன்றுக்கு வாழைப்பழம் ஊட்டினர்.
வரும் வழி எங்கும் வரவேற்பு வழங்கப்பட்ட நிலையில் முதலமைச்சர் சிலம்பாட்ட சிறுவர் ஒருவரின் சிலம்பக் கம்பை வாங்கி சுழற்றி சிலம்பாட்டம் ஆடினார்.
அதனைத் தொடர்ந்து தனியார் பள்ளியில் நடைபெற்ற அனிதா அச்சீவர்ஸ் அகாடமியில் பயின்ற மாணவர்களுக்கு பொங்கல் பரிசு பொருட்களை வழங்கினார்.
மேலும் அதே வளாகத்தில் நடைபெற்ற திமுக கட்சி சார்பில் கொளத்தூர் சட்டமன்ற தொகுதியில் கட்சித் தொண்டர்களுக்கும் பொதுமக்களுக்கும் பொங்கல் பரிசுப் பொருட்களை வழங்கினார்.
மேலும் இந்நிகழ்ச்சியில் உரை ஆற்றிய முதலமைச்சர் மு க ஸ்டாலின்,
திமுகவில் 50 சதவீதம் தேர்தல் பணிகளை முடித்து விட்டோம் இன்னும் 50 சதவீதம் இருக்கிறது நிச்சயமாக வெற்றி பெறுவோம்.
பாஜகவினர் உள்ளிட்ட பிற கட்சிகளே பாராட்டும் அளவிற்கு உள்ளது நம் திமுக காரர்களின் உழைப்பு.
பகவத்சலம் சொன்னார் திமுக காரன் ஒரு சிங்கிள் டீ யை குடித்து கொண்டு வேலை செய்வான்.
அவனுக்கு இணை யாரும் இல்லை என்று, முன்னாள் முதலமைச்சர் பக்தவச்சலம் சொன்னார்கள்.
அந்த அளவிற்கு மாற்றுக் கட்சிக்காரர்களே பாராட்டும் அளவில் திமுககாரர்கள் உழைப்பு உள்ளது.
200 தொகுதியில் அல்ல 200 க்கும் அதிகமான தொகுதிகளில் திமுக வெற்றி பெறும் என்ற நம்பிக்கை வந்துள்ளது
அனைவருக்கும் என் இனிய பொங்கல் திருநாள் வாழ்த்துக்கள் என்று அவர் அந்த பதிவில் குறிப்பிட்டுள்ளார்.
Hindusthan Samachar / P YUVARAJ