Enter your Email Address to subscribe to our newsletters

சென்னை, 10 ஜனவரி (ஹி.ச)
சென்னை எழும்பூரில் தனியார் தொலைக்காட்சி விவாத நிகழ்ச்சியில் ஏற்பட்ட மோதல் தொடர்பாக பாஜக இளைஞரணி மாநில தலைவர் எஸ்.ஜி.சூர்யாவை சென்னை திருவான்மியூரில் உள்ள அவரது இல்லத்தில் பாஜக மாநில துணைத்தலைவர் கராத்தே தியாகராஜன் சந்தித்து நலம் விசாரித்தார்.
பின்னர் செய்தியாளர்களை சந்தித்த எஸ்.ஜி.சூர்யா,
எங்கள் மீதும் , எங்களை காப்பாற்றிய காவல்துறையினர் மீதும் திமுகவினரால் ஹெல்மெட் உள்ளிட்டவற்றை கொண்டு தாக்குதல் நடத்தப்பட்டது.
இதுகுறித்து பாஜக சார்பில் காவல்துறையில் புகாரளிக்கப்பட்டுள்ளது
நிகழ்ச்சி முடிந்த பின் மின் இணைப்பை துண்டித்து விட்டு பாஜக இளைஞரணியினர் மீது தாக்குதல் நடைபெற்றது .
நிகழ்ச்சி நடைபெற்றபோதே எண் 100 ல் காவல்துறையை தொடர்புகொண்டு , நிகழ்ச்சி முடிந்தபின் திமுகவினர் தாக்குதல் நடத்த திட்டமிட்டு கட்டைகளோடும் ,பாட்டிலோடும் இருப்பது குறித்து புகாரளித்தோம். ஆனால் குறைவான காவலர்களே பாதுகாப்பு பணியில் இருந்தனர்.
திமுகவின் தங்க தமிழ்ச்செல்வன் முன்னிலையில் தாக்குதல் நடைபெற்றது. அந்த பகுதி திமுக நிர்வாகிகளும் வருகை தந்து தாக்குதலில் ஈடுபட்டனர் .
நிகழ்ச்சி நடைபெற்ற வளாகத்தில் இருந்த கண்காணிப்பு கேமரா காட்சிகளை கைப்பற்றி காவல்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்...
என்று கூறினார்.
இதனைத் தொடர்ந்து பேசிய கராத்தே தியாகராஜன்,
நடந்த சம்பவத்தை கண்டித்து சென்னையில் முக்கியமான இடத்தில் திங்கள் கிழமை மாநிலத் தலைவர் நயினார் நாகேந்திரனின் அனுமதியை பெற்று முற்றுகைப் போராட்டம் நடத்துவோம்.
இதுபோன்ற தாக்குதலுக்கு எல்லாம் பாஜகவினர் அஞ்சமாட்டோம்.
எங்களாலும் அதுபோன்ற செயலில் ஈடுபட முடியும். எல்லா அளவிலும் இறங்கி திமுகவினருக்கு பதிலடி கொடுக்க நாங்களும் தயார்
உள்துறை அமைச்சருக்கும் , தேசிய செயல் தலைவருக்கும் இந்த பிரச்சனை குறித்து தெரிவித்துள்ளோம்.
பத்திரிகையாளர் எனும் போர்வையில் திமுகவிடம் காசு வாங்கி கொண்டு இதுபோன்ற செயலில் ஈடுபடும் செந்தில்வேல் மீது வருமான வரித்துறை சோதனை நடத்த வலியுறுத்துவோம்.
அவரது வங்கி பரிவர்த்தனை உள்ளிட்டவற்றை கண்காணிக்க வேண்டும்.வள்ளியூரில் அவர் பெரிய வீடு கட்டி வருகிறார்.
இதற்கான பணம் அவருக்கு எப்படி கிடைத்தது என வருமான வரித்துறை விசாரணை நடத்த வேண்டும் என்று கூறினார்.
Hindusthan Samachar / P YUVARAJ