சென்னையில் தேசிய ஆரோக்கிய மாநாடு - மருந்து தயாரிப்பு முறைகள் குறித்து இலவச பயிற்சி
சென்னை, 10 ஜனவரி (ஹி.ச.) மத்திய அரசின் ஆயுஷ் அமைச்சகம், ஹார்ட்புல்னஸ் நிறுவனம், தேசிய ஆயுர்வேத மாணவர்கள் மற்றும் இளைஞர்கள் சங்கம் ஆகியவை இணைந்து, தேசிய ஆரோக்கிய மாநாட்டை சென்னை மணப்பாக்கத்தில் உள்ள பாபுஜி மெமோரியல் ஆசிரமத்தில் நடத்தி வருகிறத
சென்னையில் தேசிய ஆரோக்கிய மாநாடு  - மருந்து தயாரிப்பு முறைகள் குறித்து  இலவச பயிற்சி


சென்னை, 10 ஜனவரி (ஹி.ச.)

மத்திய அரசின் ஆயுஷ் அமைச்சகம், ஹார்ட்புல்னஸ் நிறுவனம், தேசிய ஆயுர்வேத மாணவர்கள் மற்றும் இளைஞர்கள் சங்கம் ஆகியவை இணைந்து, தேசிய ஆரோக்கிய மாநாட்டை சென்னை மணப்பாக்கத்தில் உள்ள பாபுஜி மெமோரியல் ஆசிரமத்தில் நடத்தி வருகிறது.

இது குறித்து மாநாட்டு ஒருங்கிணைப்பாளர்களான டாக்டர்கள் விஜய்பால், சிவகுமார் ஆகியோர் கூறியதாவது:

மத்திய அரசின் ஆயுஷ் அமைச்சகத்தின் சார்பில் ஆண்டுதோறும் தேசிய ஆரோக்கிய மாநாடு நடத்தப்படுகிறது. இந்த மாநாடு வடமாநிலங்களில் மட்டுமே நடத்தப்பட்டு வந்தது. 20 ஆண்டுகளுக்கு பின், முதன் முறையாக தமிழகத்தில் நடைபெறுகிறது.

கடந்த 8ம் தேதி துவங்கிய மாநாடு, வரும் 12ம் தேதி வரை நடைபெற உள்ளது. இந்த மாநாட்டில், சித்தா, ஆயுர்வேதா, இயற்கை மருத்துவம், யுனானி, ஹோமியோபதி தொடர்பான, 130 அரங்குகள் அமைக்கப்பட்டுள்ளன. அதில், 22 அரசு அரங்குகள் அமைந்துள்ளன.

பெண்களுக்கான, 'பெண் நலம்' கண்காட்சி இடம் பெற்றுள்ளது. இம்மாநாட்டில் சர்வதேச அளவில், 32 பேர் சிறப்புரையாற்றுகின்றனர்.மாணவர்கள், 160 கட்டுரைகளை சமர்ப்பிக்கின்றனர். அதில், சிறந்தவற்றுக்கு பரிசுகள் வழங்கப்படுகிறது.

சிறார்களுக்கான கலை நிகழ்ச்சிகள், பொதுமக்களுக்கு சிறப்பு மருத்துவ கருத்து பரிமாற்றம் தினமும் காலை 9:00 மணி முதல் இரவு 8:00 மணி வரை நடத்தப்படுகிறது. மேலும், 350 மருத்துவ செடிகள் விபரங்கள் அடங்கிய கண்காட்சி இடம் பெற்றுள்ளது.

மருந்து தயாரிப்பு விதங்களும் மக்கள் இலசவமாக அறிந்து கொள்ளலாம். ஹார்ட்புல்னஸ் நிறுவனம் சார்பில்,'மெடிடேஷன் பயற்சியும் அளிக்கப்படுகிறது.

இவ்வாறு அவர்கள் கூறினர்.

Hindusthan Samachar / vidya.b