Enter your Email Address to subscribe to our newsletters

ஒடிசா, 10 ஜனவரி (ஹி.ச.)
ஒடிசா மாநிலம் ரூர்கேலா விமான ஓடுதளத்திற்கு அருகே இந்த விபத்து நிகழ்ந்தது. இந்த விமானத்தில் 4 பயணிகள் மற்றும் இரண்டு பணியாளர்கள் என மொத்தம் 6 பேர் பயணித்துள்ளனர்.
விமானம் ரூர்கேலாவில் இருந்து புவனேஷ்வருக்கு சென்ற போது விபத்து நிகழ்ந்தது. விமானத்தில் இயந்திர கோளாறு ஏற்பட்டதன் காரணமாகவே இந்த விபத்து நிகழ்ந்திருக்கலாம் என்று கூறப்படுகிறது.
இது தொடர்பாக விமான போக்குவரத்து துறை அதிகாரிகள் தீவிர விசாரணை நடத்தி வருகிறார்கள். விமானத்தில் பயணம் செய்தவர்கள் அதிர்ஷ்டவசமாக காயங்களுடன் உயிர் தப்பினர்.
அவர்கள் அனைவரும் அருகில் உள்ள மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
இது தொடர்பாக ஒடிசா முதல்வர் மோகன் மாஞ்சி, எக்ஸ் பக்கத்தில்,
ரூர்கேலாவில் நடந்த விபத்து குறித்து அறிந்து மிகுந்த வருத்தமடைந்தேன். ஜெகநாத பெருமானின் அருளால் அனைத்து பயணிகளுக்கும் பாதுகாப்பாக உள்ளனர் என்ற செய்தி ஆறுதல் அளிக்கிறது. இந்த சம்பவத்தில் காயமடைந்தவர்களுக்கு உடனடியாக சிறந்த மருத்துவ சிகிச்சை அளிக்க வேண்டும் என்று உத்தவிட்டுள்ளேன். விபத்து குறித்தும், அடுத்த கட்ட நடவடிக்கை குறித்தும் தீவிரமாக கண்காணித்து வருகிறேன் என்றும் தெரிவித்துள்ளார்.
Hindusthan Samachar / GOKILA arumugam