Enter your Email Address to subscribe to our newsletters

சென்னை, 10 ஜனவரி (ஹி.ச)
காங்கிரஸ் மூத்த தலைவரும் இந்திய அரசியல் நிர்ணய சபை உறுப்பினர்களில் ஒருவரான டி.எம்.காளியண்ணா கவுண்டரின் 105வது பிறந்த நாளை முன்னிட்டு காங்கிரஸ் கட்சியின் தலைமை அலுவலகமான சத்தியமூர்த்தி பவனின் அவரது புகைப்படத்திற்கு அக் கட்சியின் மாநிலத் தலைவர் செல்வ பெருந்ததை மலர் தூவி மரியாதை செலுத்தினார்,
பின்னர் செய்தியாளர்களை சந்தித்த அவர்,
சி.பி.ஐ, அமலாக்கத்துறை, வருமான வரித்துறை போன்ற அமைப்புகளைத் தொடர்ந்து, பா.ஜ.க. தற்போது திரைப்பட தணிக்கை வாரியத்தையும் (சென்சார் போர்டு) தனது ஆயுதமாகப் பயன்படுத்துகிறது என்று தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டித் தலைவர் செல்வப்பெருந்தகை குற்றம் சாட்டியுள்ளார்.
மேலும் பேசிய அவர், தி.மு.க.வுடனான கூட்டணிப் பேச்சுவார்த்தை சுமூகமாக நடைபெற்று வருவதால், அதுகுறித்து பொதுவெளியில் கருத்து தெரிவிப்போர் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் அவர் எச்சரித்துள்ளார்.
காங்கிரஸ் கட்சி ஒருபோதும் கொல்லைப்புற அரசியல் செய்வதில்லை, தரகர் வேலையும் பார்ப்பதில்லை, இந்தியா கூட்டணி மிகவும் வலிமையாக உள்ளது, தி.மு.க.வுடன் தொகுதிப் பங்கீடு குறித்துப் பேச்சுவார்த்தை நடத்த அகில இந்திய காங்கிரஸ் தலைமை ஒரு குழுவை அமைத்துள்ளது.
பேச்சுவார்த்தை சுமூகமாக நடைபெற்று வருகிறது, இந்த நிலையில், கூட்டணி அல்லது தொகுதிகள் குறித்து பொதுவெளியில் பேசினால், அது பேச்சுவார்த்தையைச் சீர்குலைக்கும்.
சென்னையில் நடைபெறும் ஜனநாயக பொங்கல் விழாவில் கூட்டணி குறித்துப் பேசி குழப்பம் விளைவிப்போர் மீது கடுமையான ஒழுங்கு நடவடிக்கை எடுக்கப்படும். இவ்வாறு செல்வப்பெருந்தகை கூறினார்.
Hindusthan Samachar / P YUVARAJ