Enter your Email Address to subscribe to our newsletters

சென்னை, 10 ஜனவரி (ஹி.ச.)
ஃபிப்செயின், ரிவர் வென்ச்சர்ஸ், பியூர் சினிமா, பிராண்ட் சேஞ்ச், ஐபி கிளைம்ப், புரொடியூசர் பஜார் ஆகிய நிறுவனங்கள் இணைந்து ஃபிலிம் இன்டஸ்ட்ரி 5.0: தி ஃபியூச்சர் ஆஃப் இந்தியன் சினிமா எனும் கருத்தரங்கை சென்னையில் புதன்கிழமை (ஜனவரி 7) அன்று நடத்தின. கிண்டி சிட்கோ தொழிற்பேட்டையில் உள்ள புரொடியூசர் பஜார் அலுவலகத்தில் இது நடைபெற்றது.
திரைப்படத் துறையின் எதிர்காலத்தை அலசி, ஆராய்ந்து, ஆலோசனைகளை வழங்கும் நோக்கில் ஏற்பாடு செய்யப்பட்ட இந்த நிகழ்ச்சியில், வல்லுநர்கள் பலர் கலந்து கொண்டு படைப்பாற்றலை தொழில்நுட்பத்துடன் கலந்து திரைப்படத் துறையில் புதிய உயரங்களை எட்டுவது குறித்து விளக்கமளித்தனர்.
இந்நிகழ்வில், தொழில்நுட்பம் படைப்பாற்றலுக்கு எவ்வாறு உதவும் என்பது குறித்து சிங்கப்பூரை சேர்ந்த ரிவர் வென்ச்சர்ஸ் நிறுவனத்தின் நிறுவனர் மற்றும் தலைமை செயல் அலுவலர் டாக்டர். விவேகா காளிதாசன் உரையாற்றினார்.
கதை எழுதுதல், படத்தொகுப்பு, மற்றும் காட்சி கதைசொல்லல் ஆகியவற்றில் செயற்கை தொழில்நுட்பம் பெரும் மாற்றத்தை உண்டாக்கும் என்ற தலைப்பில் கலந்துரையாடலும், செயற்கை தொழில்நுட்பம் சார்ந்த திரைத்துறை பொருளாதார சூழலில் உரிமைகள், வருமானம் மற்றூம் உலகளாவிய தாக்கத்தை எவ்வாறு மறு உருவாக்கம் செய்யலாம் என்பது குறித்த வட்டமேசை கலந்துரையாடலும் நடைபெற்றது.
பிக்ஸ் ஸ்டோன் இமேஜஸ் பிரைவேட் லிமிடெட் வி எஃப் எக்ஸ் மேற்பார்வையாளர் உஜ்வல் தன்குட்டே, தேஜ் என்டர்டெயின்மென்ட் இயக்குநர் நாகராஜன் வைத்தியநாதன், சக்தி குளோபல் டிவி ஓடிடி தலைவர் மற்றும் மகாராஜ குழுமத்தின் திரைப்பிரிவு தலைவர் சம்மந்த்ராஜ் கோதண்ட்ராம், பாக்கெட் எஃப் எம் கிரியேட்டிவ் புரொடியூசர் அசாருதீன் ஜெ, ஐபிஆர்எஸ் தென் மண்டல உறவுகள் பிரிவின் உறுப்பினர் பாலமுரளி திருமுருகன், கிறிஸ் பிக்சர்ஸ் தயாரிப்பாளர் கிறிஸ்டி எஸ், சிங்கப்பூர் இந்திய வர்த்தக மற்றும் தொழில்துறை அமைப்பின் செயல் இயக்குநர் ஜமுனராணி கோவிந்தராஜூ, பிராண்ட் எக்சேஞ்ச் நிறுவன இயக்குநர் ரமேஷ் குமார் மல்லேலா, பியூர் சினிமா நிறுவனர் அருண் மோ, புரொடியூசர் பஜார் சட்டப்பிரிவு தலைவர் அர்ச்சனா கவில், ஓஓ ஸ்டூடியோ இன்க் இணை நிறுவனர் சிந்துஜா ராஜமாறன் உள்ளிட்டோர் இந்த கருத்தரங்கில் உரையாற்றினர்.
இவர்களது கருத்தாழம் மிக்க சிந்தனைகள் மற்றும் உரைகள் நிகழ்ச்சியில் கலந்து கொண்ட திரைத்துறையினர் இடையே தொழில்நுட்பத்தை சிறப்பாக பயன்படுத்தி வர்த்தக எல்லைகளை விரிவுபடுத்துதல், படைப்புகளை மேம்படுத்துதல் மற்றும் உரிமைகளை பாதுகாத்தல் குறித்த புரிதல் மற்றூம் விழிப்புணர்வை ஏற்படுத்தியதாக இதில் பங்கேற்றவர்கள் ஏற்பாட்டாளர்களான ஃபிப்செயின், ரிவர் வென்ச்சர்ஸ், பியூர் சினிமா, பிராண்ட் சேஞ்ச், ஐபி கிளைம்ப், புரொடியூசர் பஜார் நிறுவனங்களுக்கு நன்றி தெரிவித்தனர்.
Hindusthan Samachar / Durai.J