Enter your Email Address to subscribe to our newsletters

புதுக்கோட்டை, 12 ஜனவரி (ஹி.ச.)
புதுக்கோட்டை மாவட்டம் வேப்பங்குடியை சேர்ந்தவர் ஜெய்சங்கர் மகன் இன்பரசன் (வயது 23).
ஜல்லிக்கட்டு வீரரான இவருக்கும் அதே பகுதியை சேர்ந்த விக்னேஷ் என்பவருக்கும் இடையே ஜல்லிக்கட்டு காளைகளை வாங்கி விற்பது மற்றும் ஜல்லிக்கட்டு காளைகளை அடக்குவது, ஜல்லிக்கட்டு காளைகளை வளர்ப்பது ஆகியவற்றில் முன்விரோதம் இருந்துள்ளது.
இந் நிலையில் நேற்று இன்பரசன் காளைகளை வாங்குவதற்குகாக வெளியூர் சென்று விட்டு இரவில் ஊர் திரும்பினார்.
பின்னர் இன்று காலை அவர் வேலைக்கு தனது பெற்றோரிடம் கூறிவிட்டு வீட்டில் இருந்து புறப்பட்டு சென்றார்.
அழகாம்பாள்புரம் அரசு பள்ளி அருகே நடந்து சென்றபோது ஒரு கும்பல் அவரை வழிமறித்து,அவரைஓட ஓட விரட்டினர்.
அப்போது நிலை தடுமாறி கீழே விழுந்த அவரை கொலை வெறி கும்பல் கைகள் இருந்தால் தானே காளைகளை அடக்குவாய் என்று கூறி, இரண்டு கைகளையும் வெட்டினர்.
மேலும் உடலின் பல்வேறு இடங்களில் இன்பரசனை சரமாரியாக வெட்டி சாய்த்தனர்.
இதில் இன்பரசன் ரத்த வெள்ளத்தில் சரிந்தார்.
பின்னர் அந்த கும்பல் அங்கிருந்து தப்பி ஓடி விட்டனர்.
இதை அந்த வழியாக வந்தவர்கள் உயிருக்கு போராடிய இன்பரசனை மீட்டு 108 ஆம்புலன்ஸ் மூலம் புதுக்கோட்டை அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
ஆனால் இன்பரசன் மருத்துவமனை செல்லும் வழியிலேயே உயிரிழந்தார்.
இது குறித்து தகவலின் பேரில் வல்லதரி ஆக்கோட்டை போலீசார் விரைந்து சென்று கொலையுண்ட இன்பரசன் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர்.
சம்பவ இடத்தில் இன்ஸ்பெக்டர் நளினி விசாரணை நடத்தினார்.
இந்த கொலை சம்பவத்தில் இன்பரசனின் எதிரியாக இருந்த விக்னேஷ் உள்ளிட்ட 7 பேர் ஈடுபட்டதாக போலீசாருக்கு தகவல் கிடைத்துள்ளது.
அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து முதல்கட்ட விசாரணையை தொடங்கி உள்ளனர்.
மேலும் இதில் தொடர்புடைய குற்றவாளிகளை போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர்.
Hindusthan Samachar / Durai.J