Enter your Email Address to subscribe to our newsletters

மதுரை, 12 ஜனவரி (ஹி.ச.)
மதுரை மாவட்டம் உசிலம்பட்டி அருகே சேடபட்டி ஒன்றியத்திற்குட்பட்ட பரமன்பட்டி, காளப்பன்பட்டி, குன்னம்பட்டி, அ.தொட்டியபட்டி உள்ளிட்ட கிராமப்புற பகுதி மக்களுக்கு பேருந்து வசதி வேண்டி பலமுறை கோரிக்கை வைத்து வந்தனர்.
தேனி நாடாளுமன்ற உறுப்பினர் தங்கதமிழ்ச்செல்வன் தேர்தல் பிரச்சாரத்திற்காக வந்த போது அவரிடமும் இந்த கிராம மக்கள் பேருந்து வசதி வேண்டி கோரிக்கை வைத்தனர்.
இந்த கோரிக்கையை ஏற்று உசிலம்பட்டி மற்றும் திருமங்கலம் அரசு போக்குவரத்து கழக பனிமனைகளிலிருந்து பேருந்து சேவை வழங்க முயற்சி எடுத்து இன்று முதல் உசிலம்பட்டியிலிருந்து பேரையூர் செல்லும் அரசு பேருந்து கு.ஆண்டிபட்டி, பரமன்பட்டி வழியாகவும், திருமங்கலத்திலிருந்து சின்னக்கட்டளை வரும் பேருந்து காளப்பன்பட்டி, பெருங்காமநல்லூர் வழியாகவும், திருமங்கலத்திலிருந்து வீராம்பட்டிக்கு செல்லும் பேருந்து குன்னம்பட்டி, கரடிக்கல், அனுப்பபட்டி வழியாகவும், திருமங்கலம் முதல் பேரையூர் செல்லும் பேருந்து அ.தொட்டியபட்டி, நாகையாபுரம், பெரியபூலாம்பட்டி வழியாக செல்லவும் செல்ல அனுமதி பெற்று,
இன்று சின்னக்கட்டளையில் வைத்து இந்த 4 புதிய வழித்தடத்தில் செல்லும் 4 பேருந்துகளையும் தேனி நாடாளுமன்ற உறுப்பினர் தங்கதமிழ்ச்செல்வன் கொடி அசைத்து பேருந்து சேவையை துவக்கி வைத்தார்.
இந் நிகழ்வில் திமுக ஒன்றிய நகர நிர்வாகிகள் மற்றும் அரசு போக்குவரத்து கழக பனிமனை அலுவலர்கள் மற்றும் பொதுமக்கள் கலந்து கொண்டு நாடாளுமன்ற உறுப்பினருக்கு உற்சாக வரவேற்பு அளித்து நன்றி தெரிவித்தனர்.
Hindusthan Samachar / Durai.J