பரப்பலாறு அணையிலிருந்து நாளை முதல் பாசனத்திற்கு நீர் திறப்பு - தமிழக அரசு உத்தரவு!
திண்டுக்கல், 12 ஜனவரி (ஹி.ச.) திண்டுக்கல் மாவட்டம், ஒட்டன்சத்திரம் வட்டம், பரப்பலாறு அணையிலிருந்து 6 குளங்களுக்கு பாசனத்திற்கு தண்ணீர் திறந்து விட விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர். இந்த கோரிக்கையை ஏற்றுக் கொண்ட தமிழக அரசு, திண்டுக்கல் மாவட்ட
பரப்பளவு அணை


திண்டுக்கல், 12 ஜனவரி (ஹி.ச.)

திண்டுக்கல் மாவட்டம், ஒட்டன்சத்திரம் வட்டம், பரப்பலாறு அணையிலிருந்து 6 குளங்களுக்கு பாசனத்திற்கு தண்ணீர் திறந்து விட விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

இந்த கோரிக்கையை ஏற்றுக் கொண்ட தமிழக அரசு, திண்டுக்கல் மாவட்டம், ஒட்டன்சத்திரம் வட்டத்திலுள்ள 6 குளங்களான, முத்து பூபால சமுத்திரம், பெருமாள்குளம், சடையகுளம், செங்குளம், இராமசமுத்திரம் மற்றும் ஜவ்வாதுபட்டி,பெரியகுளம்

ஆகியவற்றின் மொத்தம் 1222.85 ஏக்கர் நிலங்கள் பாசனத்திற்கு , 18.5.2021 முதல் 17 நாட்களுக்கு, பரப்பலாறு அணையிலிருந்து மொத்தம் 102.00 மில்லியன் கன அடி தண்ணீர் திறந்துவிட அரசு உத்தரவிட்டுள்ளது.

Hindusthan Samachar / Durai.J