Enter your Email Address to subscribe to our newsletters

சென்னை, 16 ஜனவரி (ஹி.ச.)
பொங்கல் பண்டிகையின் மகிழ்ச்சியோடு நவீன பேஷனையும் இணைத்து, இந்தியாவின் நம்பர் 1 உள்ளாடை நிறுவனமான ஜிவாமே, சென்னை பீனிக்ஸ் மார்கெட்சிட்டி மாலில் உள்ள தனது ஷோரூமில் உற்சாகமான கொண்டாட்டத்தை நடத்தியது. இந்த விழாவை நடிகை மேகா ஆகாஷ் தொடங்கி வைத்தார்.
அவர் விழாவிற்கு சிறப்பு சேர்த்தது மட்டுமின்றி, வரும் 30-ந்தேதி தொடங்கவிருக்கும் ஜிவாமேவின் ‘கிராண்ட் லாஞ்சரி பெஸ்டிவல்’ குறித்தும் வாடிக்கையாளர்கள் இடையே பேசினார்.
வண்ணமயமான பொங்கல் விழாவுக்கு மத்தியில் நடைபெற்ற இந்த நிகழ்ச்சியில், ஜிவாமேவின் பல்வேறு வகையான உள்ளாடைகள், ஷேப்வேர், ஸ்லீப்வேர், லவுஞ்ச்வேர் மற்றும் விளையாட்டு உடைகள் காட்சிப்படுத்தப்பட்டன. இது வாடிக்கையாளர்கள் மற்றும் சமூக வலைதள பிரபலங்களை வெகுவாகக் கவர்ந்தது.
நிகழ்ச்சியில் நடிகை மேகா ஆகாஷ் பேசுகையில்,
“என்னைப் பொறுத்தவரை, தன்னம்பிக்கை என்பது நமக்கான வசதியில் இருந்தே தொடங்குகிறது.
அதில் நமது உள்ளாடைகள் மிகப் பெரிய பங்கு வகிக்கின்றன. பெண்களின் எதார்த்தமான வாழ்க்கைக்கும், அன்றாடத் தேவைகளுக்கும் ஏற்றவாறு ஜிவாமே ஆடைகளை வடிவமைக்கும் விதம் எனக்கு மிகவும் பிடிக்கும். வரவிருக்கும் ‘கிராண்ட் லாஞ்சரி பெஸ்டிவல்’ மூலம், பெண்களுக்குப் பொருத்தமான, அழகான மற்றும் ஒவ்வொரு நாளும் தன்னம்பிக்கை அளிக்கும் உள்ளாடைகளை வழங்குவதை ஜிவாமே இன்னும் எளிதாக்குகிறது என்று பேசினார்.
Hindusthan Samachar / Durai.J