2 கார்கள் மோதி விபத்து - நான்கு வயது மகன், தாய் உயிரிழப்பு!
சேலம், 17 ஜனவரி (ஹி.ச.) சேலம் மாவட்டம் பெத்தநாயக்கன்பாளையம் பகுதியில் உள்ள சேலம்–சென்னை தேசிய நெடுஞ்சாலையில், நாமக்கல்லில் இருந்து சென்னை நோக்கி சென்று கொண்டிருந்த கார், முன்னால் சென்ற பேருந்தை முந்த முயன்றதாக கூறப்படுகிறது. அப்போது ஓட்டுநர் கட்டு
Death


சேலம், 17 ஜனவரி (ஹி.ச.)

சேலம் மாவட்டம் பெத்தநாயக்கன்பாளையம் பகுதியில் உள்ள சேலம்–சென்னை தேசிய நெடுஞ்சாலையில், நாமக்கல்லில் இருந்து சென்னை நோக்கி சென்று கொண்டிருந்த கார், முன்னால் சென்ற பேருந்தை முந்த முயன்றதாக கூறப்படுகிறது. அப்போது ஓட்டுநர் கட்டுப்பாட்டை இழந்ததால், அந்த கார் எதிர்திசையில் வந்த மற்றொரு காரின் மீது நேருக்கு நேர் மோதி விபத்துக்குள்ளானது.

இந்த விபத்தில் காரில் பயணித்த நான்கு வயது சிறுவன் தஷ்வின் மற்றும் அவரது தாய் ஜெயப்பிரியா ஆகியோர் உடல் நசுங்கி சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தனர். விபத்து ஏற்பட்டதை தொடர்ந்து அந்த பகுதியில் போக்குவரத்து முற்றிலும் பாதிக்கப்பட்டது. சேலம்–சென்னை தேசிய நெடுஞ்சாலையில் நீண்ட நேரம் வாகனங்கள் நெரிசலில் சிக்கி கடும் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது.

தகவலின் பேரில் சம்பவ இடத்திற்கு விரைந்த ஏத்தாப்பூர் காவல்துறையினர், உயிரிழந்த தாய் மற்றும் மகனின் உடல்களை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

மேலும், விபத்து தொடர்பாக வழக்கு பதிவு செய்து, விபத்துக்கான காரணம் குறித்து விரிவான விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

இந்த துயர சம்பவம் அந்த பகுதி மக்களிடையே பெரும் அதிர்ச்சியையும் சோகத்தையும் ஏற்படுத்தியுள்ளது.

Hindusthan Samachar / ANANDHAN