Enter your Email Address to subscribe to our newsletters

மால்டா, 17 ஜனவரி (ஹி.ச)
பல்வேறு நலத்திட்டங்களுக்கு அடிக்கல் நாட்டவும், முடிவுபெற்ற திட்டங்களை தொடங்கி வைப்பதற்காகவும், மேற்கு வங்கம் மற்றும் அசாம் மாநிலங்களுக்கு இன்று (ஜனவரி 17) முதல் 2 நாள் சுற்றுப்பயணத்தை பிரதமர் மோடி மேற்கொள்கிறார்.
முதற்கட்டமாக, மேற்கு வங்கம் மாநிலத்தின் மால்டா பகுதிக்கு பிரதமர் மோடி சென்றார். அங்கு அவருக்கு உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது.
பின்னர், ஹவுரா முதல் அசாமின் கவுகாத்தி வரையிலான நாட்டின் முதலாவது வந்தே பாரத் ஸ்லீப்பர் ரயில் சேவையை பிரதமர் துவக்கி வைத்தார்.
ரயிலில் ஏறி ஆய்வு செய்த அவர், ரயில் பைலட்டுகள் மற்றும் பயணிகளிடம் கலந்து உரையாடினார்.
இதனை தொடர்ந்து 3,250 கோடி ரூபாய் மதிப்பிலான பல்வேறு ரயில், சாலை உள்கட்டமைப்பு திட்டங்கள் மற்றும் பல்வேறு நலத்திட்டங்களையும் துவக்கி வைத்தார்.
நாளை (ஜனவரி18) ஹூக்ளி மாவட்டத்தில் 830 கோடி ரூபாய் மதிப்பிலான வளர்ச்சி திட்டங்களை துவக்கிவைப்பதுடன், புதிய திட்டங்களுக்கு அடிக்கல் நாட்ட உள்ளார்.
மேலும், நியூ ஜல்பைகுரி - நாகர்கோயில் அம்ரித் பாரத் எக்ஸ்பிரஸ், நியூ ஜல்பைகுரி-திருச்சி அம்ரித் பாரத் எக்ஸ்பிரஸ் உள்ளிட்ட ரயில் சேவைகளையும் பிரதமர் மோடி துவக்கி வைக்க உள்ளார்.
அன்றைய தினம் அசாமில் நடக்கும் பல்வேறு நிகழ்ச்சிகளில் பங்கேற்கும் பிரதமர் மோடி பல்வேறு நலத்திட்டங்களை துவக்கிவைக்க உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
Hindusthan Samachar / vidya.b