Enter your Email Address to subscribe to our newsletters

திருச்சி, 02 ஜனவரி (ஹி.ச.)
மதிமுக பொதுச்செயலாளர் வைகோ திருச்சியில் இருந்து மதுரை வரை ஜனவரி 2ம் தேதி முதல் 12ம் தேதி வரை சமத்துவ நடைபயணம் செல்கிறார். அவரது நடைபயணம் தொடக்க விழா நிகழ்ச்சி இன்று
(ஜனவரி 2ம் தேதி) காலை திருச்சி தென்னூர் அண்ணாநகர் உழவர் சந்தை அருகில் உள்ள மாநகராட்சி திடலில் நடைபெறுகிறது.
முதல்வர் மு.க.ஸ்டாலின் நடைபயணத்தை துவக்கி வைத்து பேசுகிறார்.
இதில் பங்கேற்பதற்காக முதல்வர் மு.க. ஸ்டாலின் இன்று காலை விமானம் மூலம் திருச்சிக்கு வருகிறார். விமான நிலையத்தில் இருந்து காரில் புறப்படும் முதல்வர் மு.க.ஸ்டாலின் திருச்சி தலைமை தபால் நிலையத்தில் இருந்து தென்னூர் அண்ணாநகர் உழவர் சந்தை திடல் வரை சென்று பொதுமக்களை சந்திக்கிறார்.
சமத்துவ நடைபயணத்தை தொடங்கி வைத்த பின்னர் முதல்வர் ஸ்டாலின் விமானம் மூலம் சென்னைக்கு புறப்பட்டு செல்கிறார்.
முதல்வர் வருகையை முன்னிட்டு பாதுகாப்பு ஏற்பாடுகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளது.
விழா மேடை அமைப்பு மற்றும் நடைபயண ஏற்பாடு பணிகளை மதிமுக பொதுச்செயலாளர் வைகோவின் மேற்பார்வையில் மதிமுக முதன்மை செயலாளர் துரை.வைகோ எம்பி செய்து வருகிறார்.
Hindusthan Samachar / vidya.b