Enter your Email Address to subscribe to our newsletters

புதுடெல்லி, 2 ஜனவரி (ஹி.ச.)
ஜி.எஸ்.டி. எனப்படும் சரக்கு மற்றும் சேவை வரி கடந்த 2017-ம் ஆண்டு ஜூலை 1-ம் தேதி அமலுக்கு வந்தது.
அன்று முதல் மாதாந்திர ஜிஎஸ்டி வசூல் வெளியிடப்பட்டு வருகிறது.
இந்நிலையில், மத்திய நிதி அமைச்சகம் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியுள்ளதாவது:
டிசம்பர் மாதம் 1,74,550 கோடி ரூபாய் ஜி.எஸ்.டி. வசூல் ஆகியுள்ளது.
அதில், சிஜிஎஸ்டி 34,289 கோடி, எஸ்ஜிஎஸ்டி 41,368 கோடி, ஐஜிஎஸ்டி 98,394 கோடி ரூபாய் வசூல் ஆகியுள்ளது.
இது அதற்கு முந்தைய ஆண்டு டிசம்பர் மாதம் வசூல் ஆன 1.64 லட்சம் கோடியை விட 6.1 சதவீதம் அதிகம் ஆகும்.
2025 -2026 நிதியாண்டில் ஏப்ரல் முதல் டிசம்பர் வரையிலான காலகட்டத்தில் 16.5 லட்சம் கோடி ரூபாய் ஜிஎஸ்டி வசூல் ஆகி உள்ளது. இது அதற்கு முந்தைய ஆண்டை காட்டிலும் 8.6 சதவீதம் அதிகம் ஆகும்.
மேலும் 2024 - 2025 நிதியாண்டில் மொத்த ஜிஎஸ்டி வசூலானது 22.08 லட்சம் கோடி ரூபாய் ஆக இருந்தது.
2017-ல் ஜிஎஸ்டி அறிமுகம் செய்யப்பட்ட பிறகு ஒரு மாதத்தில் அதிகபட்சமாக 1.82 லட்சம் கோடி ரூபாய் வசூல் ஆகியது. வளர்ந்து வரும் பொருளாதார நடவடிக்கை காரணமாக ஆண்டுதோறும் மொத்த ஜிஎஸ்டி வசூலும் அதிகரித்து வருகிறது.
2020- 2021 ல் 11.37 லட்சம் கோடி ரூபாய் ஆக இருந்த மொத்த ஜிஎஸ்டி வசூல் 2023- 24 நிதியாண்டில் 20.18 லட்சம் கோடி ரூபாய் ஆக அதிகரித்தது.
என தெரிவித்துள்ளது.
Hindusthan Samachar / JANAKI RAM