Enter your Email Address to subscribe to our newsletters

புதுடெல்லி, 2 ஜனவரி (ஹி.ச.)
இந்தியாவின் முதல் புல்லெட் ரயில் சேவை வரும் 2027ஆம் ஆண்டு ஆகஸ்ட் 15-ஆம் தேதி செயல்பாட்டுக்கு வரும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்தியாவின் கனவு திட்டங்களில் ஒன்றாக புல்லெட் ரெயில் திட்டம் உள்ளது. ஜப்பான் உதவியுடன் இந்தியாவில் புல்லெட் ரயில் இயக்குவதற்கான பணிகள் நடைபெற்று வருகின்றன.
முதல் பகுதியாக, சூரத் முதல் பிலிமோரா வரை இயக்கப்படும். அதன் பிறகு, வாபி முதல் சூரத் வரை விரிவாக்கம் செய்யப்படும்.
தொடர்ந்து வாபி முதல் அகமதாபாத் வரையிலும், படிப்படியாக தானே முதல் அகமதாபாத் வரையிலும், மும்பை முதல் அகமதாபாத் வரையிலும் என புல்லட் ரயில் சேவை தொடர்ந்து விரிவுபடுத்தப்படும்.
508 கிலோ மீட்டர் தொலைவுக்கு மும்பை முதல் அகமதாபாத் வரை அமைக்கப்பட்டு வரும் அதி விரைவு ரயில் சேவையான புல்லட் ரயிலுக்கான கட்டமைப்புப் பணிகள் விரைவாக நடைபெற்று வருகிறது.
மேம்பாலங்கள், சுரங்கங்கள், ரயில் நிலையங்கள் அமைக்கும் பணியும் துரிதமாக நடக்கிறது.
இந்த ரயில் சேவை தொடங்கியதும், ரயில்கள் மணிக்கு 320 கிலோ மீட்டர் வேகத்தில் இயக்கப்படும்.
இதனால் பயண நேரம் 2 மணி நேரங்களாகக் குறையும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
Hindusthan Samachar / JANAKI RAM