சென்னையின் போக்குவரத்தை வேகமாகவும் எளிமையாகவும் மாற்ற மெட்ரோ ரயிலில் ஆல்பா ரூட் திட்டம் அறிமுகம்
சென்னை, 02 ஜனவரி (ஹி.ச.) சென்னையின் வடக்கு–தெற்கு பகுதிகளை ஒரே பயணத்தில் இணைக்கும் ‘ஆல்பா ரூட்’ சென்னை மெட்ரோ ரெயில் லிமிடெட் (CMRL) தனது பேஸ்–2 திட்டத்தில் புதியதாக ‘ஆல்பா ரூட்’ முறையை அறிமுகப்படுத்துகிறது. இந்த முறையில், ரயில்கள் வழக்கம்போ
Metro


சென்னை, 02 ஜனவரி (ஹி.ச.)

சென்னையின் வடக்கு–தெற்கு பகுதிகளை ஒரே பயணத்தில் இணைக்கும் ‘ஆல்பா ரூட்’

சென்னை மெட்ரோ ரெயில் லிமிடெட் (CMRL) தனது பேஸ்–2 திட்டத்தில் புதியதாக ‘ஆல்பா ரூட்’ முறையை அறிமுகப்படுத்துகிறது.

இந்த முறையில், ரயில்கள் வழக்கம்போல் சுற்றிச் செல்லாமல், காரிடார் 3 மற்றும் காரிடார் 5 இடையே நேரடியாக இயக்கப்படும்.

இதனால், சிறுசேரி → மாதவரம் → சோழிங்கநல்லூர் போன்ற பகுதிகளுக்கு நடைமேடையை மாற்றாமல், ஒரே ரயிலில் நேரடி பயணம் செய்ய முடியும்.

மொத்தம் 118.9 கி.மீ நீளத்தில், 118 நிலையங்களைக் கொண்ட இந்த மெட்ரோ வலையமைப்பின் மூலம்,

சென்னை முழுவதையும் சுமார் 2.5 மணி நேரத்தில் சுற்றிப் பயணம் செய்யலாம்.

சோழிங்கநல்லூர் போன்ற முக்கிய மையங்களில் இடமாற்ற வசதிகளும் (Interchange) ஏற்படுத்தப்படும்.

இந்த ‘ஆல்பா ரூட்’ திட்டம், சென்னையின் போக்குவரத்தை மேலும் வேகமாகவும் எளிமையாகவும் மாற்றும் என்று சொல்லப்படுகிறது.

Hindusthan Samachar / P YUVARAJ