பாஜக தேசிய தலைவராக நிதின் நபின் பதிவியேற்பு - பிரதமர் மோடி வாழ்த்து
புதுடெல்லி, 20 ஜனவரி (ஹி.ச.) மத்தியில் ஆளும் பாஜ தேசிய தலைவராக, 2020ம் ஆண்டு ஜனவரியில் மத்திய சுகாதாரத் துறை அமைச்சர் நட்டா நியமிக்கப்பட்டார். 2023ல் நட்டாவின் பதவிக்காலம் முடிந்த நிலையில், 2024 லோக்சபா தேர்தலையொட்டி நீட்டிக்கப்பட்டது. த
பாஜக தேசிய தலைவராக நிதின் நபின் பதிவியேற்பு விழா - பிரதமர் மோடி பங்கேற்பு


புதுடெல்லி, 20 ஜனவரி (ஹி.ச.)

மத்தியில் ஆளும் பாஜ தேசிய தலைவராக, 2020ம் ஆண்டு ஜனவரியில் மத்திய சுகாதாரத் துறை அமைச்சர் நட்டா நியமிக்கப்பட்டார்.

2023ல் நட்டாவின் பதவிக்காலம் முடிந்த நிலையில், 2024 லோக்சபா தேர்தலையொட்டி நீட்டிக்கப்பட்டது. தற்போது வரை, பா.ஜ.,வுக்கு புதிய தேசிய தலைவர் நியமிக்கப் படவில்லை.

பா.ஜ., தேசிய தலைவராக இளைஞர் ஒருவரை நியமிக்க பிரதமர் நரேந்திர மோடி முடிவு செய்த நிலையில், அக்கட்சியைச் சேர்ந்த பீஹார் சாலை கட்டுமானத் துறை அமைச்சர் நிதின் நபின், கடந்த டிச., 14ல் செயல் தலைவராக நியமிக்கப்பட்டார். பா.ஜ., தேசிய தலைவர் பதவிக்கான தேர்தலில் 37 வேட்புமனுக்கள் தாக்கல் செய்யப்பட்டன. அனைத்துமே, செயல் தலைவர் நிதின் நபினை தேசிய தலைவராக முன்மொழிந்திருந்தன.

வேறு யாரும் வேட்புமனு தாக்கல் செய்யாததால், பா.ஜ.,வின் தேசிய தலைவராக நிதின் நபின் போட்டியின்றி தேர்ந்தெடுக்கப்பட்டதாக நேற்று மாலை அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டது.

இந்நிலையில் இன்று

(ஜனவரி 20) பாஜ தலைமை அலுவலகத்தில் நடைபெற்ற விழாவில், அக்கட்சியின் தேசிய தலைவராக நிதின் நபின் முறைப்படி பொறுப்பேற்றார்.

இதில் பிரதமர் மோடி, மத்திய அமைச்சர்கள் ராஜ்நாத் சிங், அமித் ஷா, நட்டா, நிதின் கட்கரி, கிரண் ரிஜிஜு உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

மேலும், பாஜ ஆளும் மாநிலங்களின் முதல்வர்களும் பங்கேற்று நிதின் நபினுக்கு வாழ்த்துக்களை தெரிவித்தனர்.

Hindusthan Samachar / vidya.b