Enter your Email Address to subscribe to our newsletters

கேரளா, 20 ஜனவரி (ஹி.ச.)
கோழிக்கோட்டை சேர்ந்த
தீபக் யூ (42), ஒரு ஜவுளி நிறுவனத்தில் பணிபுரிந்து வந்தார்.
அவர் தனது குடும்பத்துடன் கோவிந்தபுரத்தில் வசித்து வந்தார். கடந்த வெள்ளிக்கிழமை அன்று, தீபக் கேஎஸ்ஆர்டிசி பேருந்தில் கண்ணூருக்குப் பயணம் செய்துள்ளார்.
அப்போது தீபக்குடன் அதே பேருந்தில் பயணம் செய்த ஷிம்ஜிதா என்ற பெண் பயணி, சமூக ஊடகங்களில் ஒரு வீடியோவை வெளியிட்டார்.
அதில், தீபக் மீது பாலியல் துன்புறுத்தல் குற்றச்சாட்டை அவர் சுமத்தியிருந்தார்.
அந்த வீடியோவில், தீபக் தன்னை பாலியல் ரீதியாக தொல்லை கொடுத்ததாக ஷிம்ஜிதா குற்றம் சாட்டினார். அவரின் தொடுதல் தற்செயலாக நடக்கவில்லை என்றும், இது பாலியல் வரம்பு மீறல் என்றும் ஷிம்ஜிதா குற்றம் சாட்டினார்.
இந்த வீடியோ சமூக ஊடகங்களில் வைரலானதை அடுத்து, தீபக் தனது உறவினர்களிடம் இந்தக் குற்றச்சாட்டை மறுத்ததாகக் கூறப்படுகிறது.
வீடியோ வெளியானதிலிருந்து தீபக் கடுமையான மன உளைச்சலில் இருந்ததாக உறவினர்கள் தெரிவித்தனர்.
தனியார் நிறுவனத்தில் மேலாளராக பணியாற்றி வந்த அந்த நபர், தன்னை பற்றிய சமூகவலைதளப் பதிவை கண்ட அதிர்ச்சியில் அவமானத்தில் தற்கொலை செய்து கொண்டார்.
இந்நிலையில், சமூகவலைதளங்களில் தான் பிரபலமாக வேண்டும், அது வைரலாக வேண்டும் என்ற நோக்கில் வேண்டுமென்றே இளம் பெண் செயல்பட்டதாக கடும் கண்டனங்கள் எழுந்தன.
ஓடும் பேருந்தில் சில்மிஷம் எனக்கூறி இன்ஸ்டா பெண் பிரபலம் வெளியிட்ட பொய் வீடியோவால் ஒருவர் தற்கொலை செய்த நிலையில், சம்பந்தப்பட்ட பெண் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.
Hindusthan Samachar / GOKILA arumugam