Enter your Email Address to subscribe to our newsletters

மதுரை, 20 ஜனவரி (ஹி.ச..)
மதுரை மேலப்பெருமாள் மேஸ்தி வீதியில் உள்ள எல்ஐசி கிளை அலுவலகத்தில் இரண்டாவது தளத்தில் செயல்பட்டு வருகிறது.
கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் 17ஆம் தேதி 8 மணி அளவில் திடீரென தீ விபத்து ஏற்பட்டது அப்பொழுது அப்பணியில் இருந்த கிளை மேலாளராக கல்யாணி நம்பி உடல் கருகி சடலமாக மீட்கப்பட்டார்.
முன்னதாக தீ விபத்து பணியில் இருந்த உதவி நிர்வாக அதிகாரியான ராம் தீ விபத்தில் காயம் ஏற்பட்டு தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்தார்.
இந்த நிலையில் கல்யாணியின் உடல் மதுரை அரசு ராஜாஜி மருத்துவமனையில் பிரேத பரிசோதனை நடைபெற்றது.
இதற்கிடையே தீ விபத்து ஏற்பட்ட போது கல்யாணி நம்பி அவர் மகனுக்கு செல்போனை தொலைபேசியில் போலீசுக்கு போன் போடு என கூறி அழைப்பை துண்டித்துள்ளார்.
இதனால் தனது தாயாருக்கு உயிர் இழப்பில் சந்தேகம் இருப்பதாக கூறி கல்யாணி நம்பியின் மகன் நாராயணன் மதுரை திலகர் காவல் நிலையத்தில் புகார் அளித்திருந்தார்.
இந்த புகாரின் அடிப்படையில் வழக்கு பதிவு செய்த திலகத்தினர் போலீசார் அலுவலகத்தில் உள்ள சிசிடிவி காட்சிகளை ஆய்வு செய்த போது ராம் மீது போலீசாருக்கு சந்தேகம் ஏற்பட்டுள்ளது.
தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பிரிவு இருந்ததால் அவரிடம் விசாரணை மேற்கொள்வது சிரமம் ஏற்பட்டு இருந்தது. இந்த நிலையில் நேற்று முன்தினம் ராமிடம் நடத்திய விசாரணையில் அதிர்ச்சிகரமான தகவல் வெளியாகிறது.
கல்யாணி நம்பி கடந்த ஆறு மாதத்திற்கு முன்பு தான் திருநெல்வேலி மாவட்டத்திலிருந்து மதுரைக்கு பணி மாறுதல் பெற்று மதுரைக்கு வந்துள்ளார் அப்பொழுது ஆய்வு செய்ததில் ராம் கணக்குகளில் ஏகப்பட்ட குளறுபடிகள் செய்து இருப்பதால் அதை கண்டுபிடித்துள்ளார்.
மிகவும் நேர்மையான அதிகாரி என்பதால் இவரால் நமக்கு ஏதேனும் பிரச்சனைகள் ஏற்படும் என நினைத்து இவரை கொலை செய்வதற்கு திட்டம் தீட்டி பெட்ரோலை கல்யாணி நம்பி மீது ஊற்றி மேலும் அலுவலகம் முழுவதும் பெட்ரோலை ஊற்றி தான் மேலும் பெட்ரோல் ஊற்றி காலில் காயம் ஏற்பட்டது போல் விபத்து போன்று நாடகத்தை ஏற்படுத்தி உள்ளார்.
உடல் ஒரு இளைஞர் இறந்ததாகவும் கூறப்படுகிறது. விபத்து கொலை வழக்காக பதிவு செய்யப்பட்டு தற்பொழுது ராம் கைது செய்யப்பட்டு போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
Hindusthan Samachar / GOKILA arumugam