பா.ஜ.க. தேசிய செயல் தலைவர் நிதின் நபீனுக்கு இசட் பிரிவு பாதுகாப்பு - மத்திய உள்துறை அமைச்சகம் அறிவிப்பு
புதுடெல்லி, 20 ஜனவரி (ஹி.ச.) பாஜக தேசிய தலைவராக அக்கட்சியின் தேசிய செயல் தலைவராக இருந்த நிதின் நபின் இன்று முறைப்படி தேர்ந்தெடுக்கப்பட்டார். பாஜகவின் அமைப்புத் தேர்தல் அலுவலர் கே.லக்ஷ்மண் இதனை அறிவித்தார். மேலும், அதற்கான சான்றிதழையும் நித
பா.ஜ.க. தேசிய செயல் தலைவர் நிதின் நபீனுக்கு இசட் பிரிவு பாதுகாப்பு - மத்திய உள்துறை அமைச்சகம் அறிவிப்பு


புதுடெல்லி, 20 ஜனவரி (ஹி.ச.)

பாஜக தேசிய தலைவராக அக்கட்சியின் தேசிய செயல் தலைவராக இருந்த நிதின் நபின் இன்று முறைப்படி தேர்ந்தெடுக்கப்பட்டார்.

பாஜகவின் அமைப்புத் தேர்தல் அலுவலர் கே.லக்ஷ்மண் இதனை அறிவித்தார்.

மேலும், அதற்கான சான்றிதழையும் நிதின் நபினிடம் அவர் வழங்கினார். இந்த பதவியேற்பு நிகழ்வில் பிரதமர் நரேந்திர மோடி, உள்துறை அமைச்சர்

அமித் ஷா, பாதுகாப்பு அமைச்சர் ராஜ்நாத் சிங் உள்ளிட்ட கட்சியின் முன்னணி நிர்வாகிகள் பெருமளவில் கலந்து கொண்டனர்.

இந்நிலையில், பா.ஜ.க. தேசிய செயல் தலைவர் நிதின் நபீனுக்கு இசட் பிரிவு ஆயுத பாதுகாப்பு வழங்கப்படும் என மத்திய ரிசர்வ் போலீஸ் படை (சி.ஆர்.பி.எப்.) இன்று அறிவித்தது.

இந்த புதிய இசட் பிரிவு ஆயுத பாதுகாப்பின்படி, நாடு முழுவதும் நபீன் செல்லும் இடங்களில் எல்லாம் ஆயுதமேந்திய சி.ஆர்.பி.எப். பாதுகாப்பு அளிக்கப்படும். அவருடைய வீட்டிலும் இந்த பாதுகாப்பு வழங்கப்படும்.

கடந்த டிசம்பர் 14-ந்தேதி அக்கட்சியின் நாடாளுமன்ற வாரிய ஒப்புதலுடன், தேசிய செயல் தலைவராக நபீன் நியமனம் செய்யப்பட்ட சில நாட்களில் அவருக்கு சி.ஆர்.பி.எப். பாதுகாப்பு வழங்கப்பட்டது.

இந்நிலையில், உளவு துறை அளித்த பாதுகாப்பு ஆய்வு தொடர்பான தகவலை அடுத்து, அவருக்கு, மத்திய உள்துறை அமைச்சகம் இந்த உயரிய பாதுகாப்புக்கான உத்தரவை பிறப்பித்து உள்ளது குறிப்பிடத்தக்கது.

Hindusthan Samachar / vidya.b