பாஜக தேசிய தலைவராக பொறுப்பேற்ற நிதின் நபினுக்கு டிடிவி தினகரன் வாழ்த்து
சென்னை, 20 ஜனவரி (ஹி.ச.) பாரதிய ஜனதா கட்சியின் 12-வது தேசியத் தலைவரை தேர்ந்தெடுப்பதற்கான தேர்தல் இன்று நடைபெற்றது. இதற்கான வேட்புமனுக்கள் நேற்று பெறப்பட்டன. இத்தேர்தலில் நிதின் நபினை தவிர வேறு யாரும் வேட்புமனு தாக்கல் செய்யவில்லை. இதனால்
TTV Dhinakaran congratulated Nitin Nabin


சென்னை, 20 ஜனவரி (ஹி.ச.)

பாரதிய ஜனதா கட்சியின் 12-வது தேசியத் தலைவரை தேர்ந்தெடுப்பதற்கான தேர்தல் இன்று நடைபெற்றது.

இதற்கான வேட்புமனுக்கள் நேற்று பெறப்பட்டன.

இத்தேர்தலில் நிதின் நபினை தவிர வேறு யாரும் வேட்புமனு தாக்கல் செய்யவில்லை. இதனால் அவர் போட்டியின்றி தேர்வு செய்யப்பட்டார்.

டெல்லியில் உள்ள பாஜக தலைமையகத்தில் இன்று காலை 11.30 மணிக்கு நடைபெற்ற நிகழ்ச்சியில் கட்சித் தலைவராக நிதின் நபின் பதவியேற்றுக் கொண்டார்.

இந்த நிலையில், பாஜக தேசிய தலைவராக பொறுப்பேற்ற நிதின் நபினுக்கு டிடிவி தினகரன் வாழ்த்து தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள பதிவில் கூறியிருப்பதாவது,

பாரதிய ஜனதா கட்சியின் புதிய தேசிய தலைவராகப் பொறுப்பேற்றிருக்கும் திரு.நிதின் நபின் அவர்களுக்கு எனது மனமார்ந்த வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்கிறேன்.

இளம் வயதில் மிகப்பெரிய பொறுப்புக்குத் தேர்வாகியிருக்கும் திரு.நிதின் நபின் அவர்களின் தேசப் பணியும், மக்கள் பணியும் மேன்மேலும் சிறக்க வாழ்த்தி மகிழ்கிறேன்.

இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

Hindusthan Samachar / vidya.b