Enter your Email Address to subscribe to our newsletters

புதுடெல்லி, 20 ஜனவரி (ஹி.ச.)
இந்திய தேசத்து உயர்கல்வி கூடங்களான பல்கலைக்கழகங்கள், கல்லூரிகள் மற்றும் இதர கல்வி நிலையங்களில், சென்ற ஐந்து ஆண்டுகளில் சாதி ரீதியான வேற்றுமை குறித்த குற்றச்சாட்டுகள் ஏறக்குறைய 118% அதிகரித்துள்ளதாக யுஜிசி எனும் பல்கலைக்கழக மானியக் குழு தெரிவித்துள்ளது.
2016-இல் சாதிய வன்மத்தால் ஹைதராபாத் பல்கலைக்கழக மாணவன் ரோகித் வெமுலா தன் உயிரை மாய்த்துக் கொண்ட விவகாரத்தில், உச்ச நீதிமன்றத்தில் யுஜிசி இந்த புள்ளிவிவரங்களை சமர்ப்பித்துள்ளது.
உச்ச நீதிமன்றத்தில் யுஜிசி தாக்கல் செய்துள்ள தரவுகளின்படி, 2019 முதல் 2024 வரையிலான கால அவகாசத்தில் மொத்தம் 1,160 புகார்கள் வந்துள்ளன. இதில் 1,052 புகார்களுக்கு ஒரு முடிவு கட்டப்பட்டுள்ளதாக யுஜிசி கூறியுள்ளது.
குறிப்பாக 2019-20 கல்வி வருடத்தில் ஜாதி வெறி காரணமாக வெறும் 173 புகார்கள் மட்டுமே பதிவாகியிருந்தன. ஆனால், 2023-24 கல்வி வருடத்தில் இந்த எண்ணிக்கை 378 ஆக உயர்ந்துள்ளது.
அதே சமயம், புகார்களுக்கு ஒரு முடிவு வந்துள்ளதாக யுஜிசி வெளியிட்டுள்ள புள்ளிவிவரங்கள் பொய்யானவை என்று டெல்லி மற்றும் ஜே.என்.யு பல்கலைக்கழக பேராசிரியர்கள் குற்றம் சாட்டியுள்ளனர்.
Hindusthan Samachar / JANAKI RAM