Enter your Email Address to subscribe to our newsletters

துபாய், 21 ஜனவரி (ஹி.ச.)
ஆப்கானிஸ்தான் வெஸ்ட் இண்டீஸ் அணிகள் இடையிலான 3 போட்டிகள் கொண்ட டி20 தொடர் துபாயில் நடைபெறுகிறது.
இரு அணிகளுக்கும் இடையேயான முதல் டி20 போட்டி நேற்று நடைபெற்றது.
முதலில் களமிறங்கிய ஆப்கானிஸ்தான் அணி, அதிரடி ஆட்டத்தை வெளிப்படுத்தி, நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்களில் 3 விக்கெட்டுகளை இழந்து 181 ரன்களை குவித்தது. இப்ராஹிம் ஜத்ரான் 87 ரன்களும், ரசூல் 84 ரன்களும் விளாசி அணியின் வெற்றிக்கு வித்திட்டனர்.
தொடர்ந்து 182 ரன்கள் என்ற இலக்கை துரத்திய வெஸ்ட் இண்டீஸ் அணி, ஆப்கானிஸ்தானின் பந்துவீச்சுக்கு ஈடுகொடுக்க முடியாமல் திணறியது.
இதனால் வெஸ்ட் இண்டீஸ் அணி 20 ஓவர்கள் முடிவில் 9 விக்கெட்டுகளை பறிகொடுத்து 143 ரன்கள் மட்டுமே எடுத்தது. குயின்டன் சாம்சன் அதிகபட்சமாக 30 ரன்கள் எடுத்தார்.
இதன்மூலம், ஆப்கானிஸ்தான் அணி 38 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்று, தொடரில் 1-0 என்ற கணக்கில் முன்னிலை வகிக்கிறது.
Hindusthan Samachar / JANAKI RAM