தேசிய நெடுஞ்சாலையில் திடீரென தீப்பற்றி எரிந்த டாரஸ் லாரி !
நாகர்கோவில், 22 ஜனவரி (ஹி.ச.) கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவில்,ஒழுகினசேரி தேசிய நெடுஞ்சாலையில் வெளி மாநிலங்களில் இருந்து குமரி மாவட்டம் மற்றும் கேரள மாநிலத்திற்கு வாகனங்கள், இரு சக்கர மோட்டார் வாகனங்கள் ஏற்றிச் செல்லும் வாகனங்கள் நீண்ட வரிசையி
விபத்து


நாகர்கோவில், 22 ஜனவரி

(ஹி.ச.)

கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவில்,ஒழுகினசேரி தேசிய நெடுஞ்சாலையில் வெளி மாநிலங்களில் இருந்து குமரி மாவட்டம் மற்றும் கேரள மாநிலத்திற்கு வாகனங்கள், இரு சக்கர மோட்டார் வாகனங்கள் ஏற்றிச் செல்லும் வாகனங்கள் நீண்ட வரிசையில் நிற்பது வாடிக்கை.

இந் நிலையில் அந்தப் பகுதியில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த டாரஸ் லாரி ஒன்று அதிகாலை தீப்பற்றி எரிந்தது.

உடனடியாக அவ்வழியாக வந்த வாகன ஓட்டிகள் போலீசாருக்கு கொடுத்த தகவலின் அடிப்படையில் விரைந்து வந்த தீ அணைப்புத்துறையினர் சுமார் ஒரு மணி நேரம் போராடி தீயை அணைத்தனர்.

இந்த விபத்தில் லாரி முற்றிலுமாக எரிந்து நாசமானது.

இதன் அருகில் இருந்த சாலை ஓர கடைகளிலும் பற்றிய

தீ அணைக்கப்பட்டது.

இதுகுறித்து போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Hindusthan Samachar / Durai.J