தனியார் நிதி நிறுவன ஊழியர் தூக்கில் தொங்கியவாறு சடலமாக மீட்பு
திருவண்ணாமலை, 22 ஜனவரி (ஹி.ச.) திருவண்ணாமலை மாவட்டம் போளூர் அடுத்த தேப்பனந்தல் கிராமத்தை சேர்ந்தவர் பாண்டுரங்கன் மகன் தணிகைமலை(25), இவர் திருவண்ணாமலை மாநகராட்சிக்கு உட்பட்ட கீழ்நாச்சிப்பட்டு பகுதியில் உள்ள தனியார் நிதி நிறுவனத்தில் கடந்த 6 மாதங்கள
Death


திருவண்ணாமலை, 22 ஜனவரி (ஹி.ச.)

திருவண்ணாமலை மாவட்டம் போளூர் அடுத்த தேப்பனந்தல் கிராமத்தை சேர்ந்தவர் பாண்டுரங்கன் மகன் தணிகைமலை(25), இவர் திருவண்ணாமலை மாநகராட்சிக்கு உட்பட்ட கீழ்நாச்சிப்பட்டு பகுதியில் உள்ள தனியார் நிதி நிறுவனத்தில் கடந்த 6 மாதங்களாக பணியாற்றி வருகிறார்.

இந்நிலையில் இன்று மதியம் நிதி நிறுவன அலுவலகத்தின் தனி ஓய்வு அறையின் மேல் உள்ள கொக்கியில் புதியதாக வாங்கி வந்த புடவை கொண்டு தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டுள்ளார்.

இதனை அறிந்த சக ஊழியர்கள் அவரை காப்பாற்றுவதற்காக புடவையை கத்தியை கொண்டு அறுத்து காப்பாற்ற முயன்றுள்ளனர், ஆனாலும் அவர் பரிதாபமாக உயிரிழந்துள்ளார்.

பின்னர் இந்த சம்பவம் குறித்து சக ஊழியர்கள் அவரது குடும்பத்தினருக்கும் மற்றும் கீழ்பெண்ணாத்தூர் காவல் நிலையத்திற்கு தகவல் தெரிவித்துள்ளனர்.

பின்னர் அங்கு வந்த அவரது பெற்றோர் மற்றும் உறவினர்கள் அவரது உடலை பார்த்து கதறி அழுதனர், பின்னர் போலீசார் தணிகைமலையின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக திருவண்ணாமலை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

இந்த சம்பவம் குறித்து கீழ்பெண்ணாத்தூர் போலீசார் வழக்கு பதிவு செய்து இது கொலையா? தற்கொலையா ? என பல்வேறு கோணத்தில் தீவிரமாக விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Hindusthan Samachar / ANANDHAN