குடியரசு தின அணி வகுப்பில்‌ முதல் முறையாக சிஆர்பிஎப்‌ ஆண்கள்‌ படையை வழிநடத்தும்‌ இளம்‌ பெண்‌ அதிகாரி
புதுடெல்லி, 22 ஜனவரி (ஹி.ச.) வரும் 26ம் தேதி இந்திய தேசம் முழுவதும் குடியரசு தின விழா கோலாகலமாக கொண்டாடப்படவுள்ளது. அன்று புதுடெல்லியின் கர்தவ்யா பாதையில், நம் நாட்டின் ராணுவ பலம், கலைநயம், பாரம்பரியம் ஆகியவற்றை எடுத்துக்காட்டும் விதமாக அணிவகுப்ப
வரும்‌ 26ம்‌ தேதி குடியரசு தின அணிவகுப்பில்‌ முதல்முறையாக சிஆர்பிஎப்‌ ஆண்கள்‌ படையை வழிநடத்தும்‌ இளம்‌ பெண்‌


புதுடெல்லி, 22 ஜனவரி (ஹி.ச.)

வரும் 26ம் தேதி இந்திய தேசம் முழுவதும் குடியரசு தின விழா கோலாகலமாக கொண்டாடப்படவுள்ளது.

அன்று புதுடெல்லியின் கர்தவ்யா பாதையில், நம் நாட்டின் ராணுவ பலம், கலைநயம், பாரம்பரியம் ஆகியவற்றை எடுத்துக்காட்டும் விதமாக அணிவகுப்பு ஊர்வலம் நடக்கவுள்ளது.

இதில் சிஆர்பிஎஃப் ஆண்களின் அணிவகுப்பும் ஒரு அங்கமாக இடம் பெறுகிறது.

140 அல்லது அதற்கும் அதிகமான வீரர்கள் பங்குபெறும் இந்த படைப்பிரிவை 26 வயது நிரம்பிய இளம் பெண் அதிகாரி சிம்ரன் பாலா முன் நின்று வழிநடத்துகிறார்.

குடியரசு தின அணிவகுப்பில் ஆண்கள் அணிக்கு ஒரு பெண் தலைமை தாங்குவது இதுவே முதன்முறையாகும். இவருக்குப் பலரும் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.

சிம்ரன் பாலா ஜம்மு காஷ்மீர் மாநிலத்தில் உள்ள ரஜோரி மாவட்டத்தைச் சேர்ந்தவர். கடமை உணர்வுக்கும், சுறுசுறுப்பான வேலைக்கும் பெயர் பெற்றவர்.

ரஜோரி மாவட்டத்தில் இருந்து சிஆர்பிஎஃப் அமைப்பில் அதிகாரியாகச் சேர்ந்த முதல் பெண் இவர் என்பது குறிப்பிடத்தக்கது.

ஜம்முவில் உள்ள காந்திநகர் பெண்கள் கல்லூரியில் அரசியல் அறிவியல் துறையில் இளங்கலை பட்டம் பெற்றுள்ளார்.

2025ஆம் ஆண்டு பணியில் சேர்ந்த இவர், முதன்முதலாக சத்தீஸ்கரில் நக்சல் தீவிரவாதிகளை ஒடுக்கும் நடவடிக்கையில் ஈடுபடுத்தப்பட்டார்.

பயிற்சியின்போது அவரின் திறமையைக் கண்டு சிறந்த அதிகாரி என்று பாராட்டி சான்றிதழும் அளிக்கப்பட்டுள்ளது.

Hindusthan Samachar / JANAKI RAM