Enter your Email Address to subscribe to our newsletters

சென்னை, 24 ஜனவரி (ஹி.ச.)
இந்தியாவில் ஒவ்வொரு ஆண்டும் ஜனவரி 24-ஆம் தேதி 'தேசிய பெண் குழந்தைகள் தினம்' கொண்டாடப்படுகிறது.
பெண் குழந்தைகளின் உரிமைகளை நிலைநாட்டவும், அவர்கள் சந்திக்கும் சவால்கள் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தவும் 2008-ஆம் ஆண்டு முதல் மத்திய அரசால் இத்தினம் கடைபிடிக்கப்படுகிறது.
நோக்கம்:
-பெண் குழந்தைகளுக்கு சமூகத்தில் சமமான வாய்ப்புகளை வழங்குதல்.
-பாலின பாகுபாட்டை ஒழித்தல்.
-பெண் கல்வியின் முக்கியத்துவத்தை வலியுறுத்துதல்.
-பெண் சிசுக்கொலை மற்றும் குழந்தை திருமணத்தைத் தடுத்தல்.
முக்கியத்துவம்:
ஒரு நாட்டின் முன்னேற்றம் அந்த நாட்டின் பெண்களின் முன்னேற்றத்தைப் பொறுத்தே அமைகிறது.
பெண் குழந்தைகளுக்கு ஊட்டச்சத்துள்ள உணவு, தரமான கல்வி மற்றும் பாதுகாப்பான சூழலை உறுதி செய்வது ஒவ்வொரு குடிமகனின் கடமையாகும்.
பெண் குழந்தைகளைக் காப்போம், பெண் குழந்தைகளுக்கு கற்பிப்போம் போன்ற திட்டங்கள் மூலம் அரசு பெண்களின் முன்னேற்றத்திற்காகப் பாடுபட்டு வருகிறது.
பெண் குழந்தைகளின் உரிமைகள்:
பெண் குழந்தைகள் கல்வி கற்பதற்கும், தங்களுக்குப் பிடித்த துறையைத் தேர்ந்தெடுத்து சாதனை படைப்பதற்கும் முழு உரிமை உண்டு.
விளையாட்டு, அறிவியல், அரசியல் என அனைத்துத் துறைகளிலும் இன்று பெண்கள் தடம் பதித்து வருகின்றனர்.
பெண் குழந்தைகளை பாரமாக நினைக்காமல், நாட்டின் வரமாக கருத வேண்டும். அவர்களுக்கு தன்னம்பிக்கையையும், சுதந்திரத்தையும் அளிப்பதன் மூலம் ஒரு வலிமையான சமுதாயத்தை உருவாக்க முடியும்.
பெண் குழந்தைகளை போற்றுவோம்! அவர்களின் எதிர்காலத்தை ஒளிமயமாக்குவோம்!
Hindusthan Samachar / JANAKI RAM