Enter your Email Address to subscribe to our newsletters


சென்னை, 25 ஜனவரி (ஹி.ச.)
ஹிந்தி இந்தியாவின் தேசிய மொழி அல்ல, அலுவல் மொழி மட்டுமே, ஆங்கிலம் இணைப்பு மொழி என பாஜக தலைமை செய்தி தொடர்பாளர் நாராயணன் திருப்பதி எக்ஸ் தளத்தில் தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள பதிவில் குறிப்பிட்டுள்ளதாவது,
இதில் எந்த சமரசமோ, சந்தேகமோ இல்லை. சிலர் தெரிந்து பேசுகிறார்கள், சிலர் தெரியாமல் ஹிந்தி தேசிய மொழி என்று பேசுகிறார்கள். வடமாநிலங்களில் உள்ளவர்கள் ஹிந்தியை 'தேசிய மொழியாக' சித்தரிப்பது தவறு தான். ஆனால், வேட்டி கட்டிய தமிழன் என்று தன்னை சொல்லிக் கொள்ளும் காங்கிரஸ் கட்சி தலைவர் ப.சிதம்பரம் தான் 2010ல் ஹிந்தியை தேசிய மொழி என்று சொன்னவர் என்பதை திமுக வினர் உணரவேண்டும். அன்றைக்கு ஆட்சியில் இருந்ததால் திமுகவினர் வாய்பொத்தி, கைகட்டி வேடிக்கை பார்த்துக்கொண்டிருந்தனர். உண்மையிலேயே ஹிந்தி திணிப்பை எதிர்ப்பவர்களாக இருந்திருந்தால், 2010 லேயே ஆட்சியை விட்டு வெளியேறி, கூட்டணியை முறித்து கொண்டிருப்பார்கள்.
'யாமறிந்த மொழிகளிலே தமிழ் மொழி போல் இனிதாவது எங்கும் காணோம்.
தேமதுரத் தமிழோசை உலகமெல்லாம் பரவும்வகை செய்தல் வேண்டும் என்ற பாரதியின் கூற்றுப்படி என்று உலகின் எந்த மூலைக்கு சென்றாலும், 'உலகிலேயே மூத்த மொழி தமிழ் மொழி' தமிழின் பெருமையை பரப்புகின்ற நரேந்திர மோடி அவர்களின் வரிகளும் தமிழின் பெருமையை உணர்த்துகிறது.
ஹிந்தி இந்தியாவின் தேசிய மொழி அல்ல, அலுவல் மொழி மட்டுமே, ஆங்கிலம் இணைப்பு மொழி. இந்நாட்டில் உள்ளோர் பேசும் அனைத்து மொழிகளும் தேசிய மொழிகள் தான் என்று அவர் அந்த பதிவில் குறிப்பிட்டுள்ளார்.
Hindusthan Samachar / P YUVARAJ