Enter your Email Address to subscribe to our newsletters

மதுரை, 25 ஜனவரி (ஹி.ச.)
மதுரை கோரிப்பாளையம் பகுதியில் நடைபெறும் மேம்பாலம் பணிகளை பொதுப்பணித்துறை அமைச்சர் எ.வ வேலு, மூர்த்தி மாவட்ட ஆட்சியர் பிரவீன் குமார் மற்றும் பொதுப்பணித்துறை அதிகாரிகள் ஆய்வு மேற்கொண்டனர்.
தொடர்ந்து செய்தியாளர்களை சந்தித்த அமைச்சர் எ.வவேலு கூறுகையில்;-
மதுரையில் நீண்ட நாள் கோரிக்கையான கோரிப்பாளையம் செல்லூர் பகுதியை இணைக்கும் மேம்பாலம் 190 கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்யப்பட்டு அதற்கான பணிகள் தொடங்கி நடைபெற்று வருகிறது.
தற்போது கோரிப்பாளையம் மேம்பாலம் பணிகள் முடிந்திருக்க வேண்டும் தனியா கல்லூரி நிர்வாகம் வழக்கு தொடுக்கப்பட்டதால் தாமதமாகி உள்ளது.
தற்போது ஏழாவது முறையாக கோரிப்பாளையம் பணிகளை ஆய்வு செய்துள்ளேன்.
கோரிப்பாளையம் மேம்பாலம் பிப்ரவரி 10ஆம் தேதி பணிகள் முழுமையாக முடிவடையும்- அதற்குப் பிறகு முதல்வர் திறந்து வைப்பார்.
வைகை வடகரை சாலை நீண்ட நாள் கோரிக்கை இற்காக 168 கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்யப்பட்டு பணிகள் நடைபெற்று வருகிறது.
கோரிபாளையம் மேம்பாலத்திற்கு சிறப்பான பேரை வைக்க வேண்டும் என கோரிக்கை வந்துள்ளது. இந்த பகுதி மக்கள் என்ன எண்ணுகிறார்களோ அந்த பெயரை முதல்வர் வைப்பார்.
விரகனூர் மேம்பாலத்திற்கு திட்ட அறிக்கை தயார் செய்யப்பட்டு வருகிறது. முதலமைச்சர் முன்னெடுப்பின்படி விபத்தை குறைப்பதற்காக நூறு இடங்களை கண்டறிக்கப்பட்டு விபத்துகளை குறைக்கப்பட்டு வருகிறோம்.
சுங்கச்சாவடி சாலைகள் ஒப்பந்ததாரர்கள் ஒப்பந்தத்தின் அடிப்படையில் சாலை அமைக்கப்பட்டு வருகிறது இல்லையென்றால் அரசு சார்பாகவும் செய்யப்பட்டு வருகிறது. என்றார்.
Hindusthan Samachar / Durai.J