2026 ஆம் ஆண்டிற்கான பத்ம விருதுகள் அறிவிப்பு
புதுடெல்லி, 25 ஜனவரி (ஹி.ச.) இந்தியாவின் உயரிய சிவிலியன் விருதுகளில் ஒன்றான பத்ம விருதுகள் ஆண்டுதோறும் குடியரசு தினத்தை முன்னிட்டு வழங்கப்படும். இந்த விருதுகள் பத்ம விபூஷன், பத்ம பூஷன் மற்றும் பத்மஸ்ரீ ஆகிய மூன்று பிரிவுகளின் கீழ் வழங்கப்படுக
2026 ஆம் ஆண்டிற்கான பத்ம விருதுகள் அறிவிப்பு


புதுடெல்லி, 25 ஜனவரி (ஹி.ச.)

இந்தியாவின் உயரிய சிவிலியன் விருதுகளில் ஒன்றான பத்ம விருதுகள் ஆண்டுதோறும் குடியரசு தினத்தை முன்னிட்டு வழங்கப்படும். இந்த விருதுகள் பத்ம விபூஷன், பத்ம பூஷன் மற்றும் பத்மஸ்ரீ ஆகிய மூன்று பிரிவுகளின் கீழ் வழங்கப்படுகின்றன.

பொது சேவை மற்றும் முக்கிய துறைகளில் குறிப்பிடத்தக்க சாதனை புரிந்தவர்களை கவுரவிக்க இந்த விருது வழங்கப்படுகிறது.

அந்த வகையில், 2026-ம் ஆண்டுக்கான பத்மஸ்ரீ விருதுகளை மத்திய அரசு அறிவித்துள்ளது. தமிழகத்தில் மொத்தம் 5 பேருக்கு விருது அறிவிக்கப்பட்டுள்ளது.

அதன்படி, தமிழ்நாட்டைச் சேர்ந்த கால்நடை மருத்துவ ஆராய்ச்சியாளர் புண்ணிய மூர்த்தி நடேசன், ஓதுவார் திருத்தணி சுவாமிநாதன், ஓவியர் நீலகிரி ஆர். கிருஷ்ணன், சிற்பக் கலைஞர் காளியப்ப கவுண்டர், திருவாரூர் பக்தவத்சலம் ஆகியோருக்கு விருதுகள் அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும், புதுச்சேரியை சேர்ந்த சிலம்பக் கலைஞர் கே.பழனிவேலுக்கும் பத்மஸ்ரீ விருது அறிவிக்கப்பட்டுள்ளது.

விருது பெற்றவர்களின் முழு பட்டியல் பின்வருமாறு

1. அங்கே கவுடா

2. அர்மிடா பெர்னாண்டஸ்

3. பகவான்தாஸ் ராய்க்வார்

4. பிக்ல்ய லடக்யா திண்டா

5. பிரிஜ் லால் பட்

6. புத்ரி தத்தி

7. சரண் ஹெம்ப்ராம்

8. சிரஞ்சி லால் யாதவ்

9. தர்மிக்லால் சுனிலால் பாண்டியா

10. கஃப்ருதீன் மேவதி ஜோகி

11. ஹாலி போர்

12. இந்தர்ஜித் சிங் சித்து

13. கே பஜனைவேல்

14. கைலாஷ் சந்திர பந்த்

15. கேம் ராஜ் சுந்தர்யால்

16. கொல்லக்காயில் தேவகி அம்மா ஜி

17. குமாரசாமி தங்கராஜ்

18. மகேந்திர குமார் மிஸ்ரா

19. மீர் ஹாஜிபாய் கசம்பாய்

20. மோகன் நகர்

21. நரேஷ் சந்திர தேவ் வர்மா

22. நிலேஷ் வினோத்சந்திர மாண்டலேவாலா

23. நூருதீன் அகமது

24. ஓதுவார் திருத்தணி சுவாமிநாதன்

25. பத்மா குர்மெட்

26. பொக்கில லெக்தேபி

27. புண்ணியமூர்த்தி நடேசன்

28. ஆர் கிருஷ்ணன்

29. ரகுபத் சிங்

30. ரகுவீர் துக்காராம் கேத்கர்

31. ராஜஸ்தபதி காளியப்ப கவுண்டர்

32. ராம ரெட்டி மாமிடி

33. ராமச்சந்திர காட்போல் மற்றும் சுனிதா காட்போல்

34. எஸ் ஜி சுசீலாம்மா

35. சங்குசங் எஸ் பொங்கேனர்

36. ஷஃபி ஷௌக்

37. ஸ்ரீரங் தேவபா லாட்

38. ஷியாம் சுந்தர்

39. சிமாஞ்சல் பட்ரோ

40. சுரேஷ் ஹனகவாடி

41. தகா ராம் பீல்

42. டெச்சி குபின்

43. திருவாரூர் பக்தவத்சலம்

44. விஸ்வ பந்து

45. யும்னம் ஜத்ரா சிங்

உள்ளிட்டோர் பத்ம விருதுகளுக்கு தேர்வாகியுள்ளனர்.

Hindusthan Samachar / vidya.b