Enter your Email Address to subscribe to our newsletters

காஞ்சிபுரம், 25 ஜனவரி (ஹி.ச)
காஞ்சிபுரம் மாவட்டம் குன்றத்துார் அருகே உள்ள மணிமங்கலம் ராஜகோபால சுவாமி கோவிலானது 1300 ஆண்டுகளுக்கு மேல் பழமையானது.
மூலவர் ராஜகோபாலசுவாமி தன் கைகளில் சங்கையும், சக்கரத்தையும் இடம் மாற்றி ஏந்திருப்பது தனி சிறப்பாகும். தாயார் திருநாமம் செங்கமலவல்லி ஆகும்.
பொதுவாக சிவன் கோவில்களில் தான், கோஷ்டத்தில் விநாயகர் இருப்பார். ஆனால், இக்கோவிலில் பெருமாள் சன்னதி கோஷ்டத்தில் விநாயகர் இருப்பது தனி சிறப்பாகும். மேலும் தட்சிணாமூர்த்தியும் இக்கோவிலில் எழுந்தருளி இருக்கிறார்.
ராஜகோபாலர் கோவிலுக்கு எதிரே சற்று தூரத்தில் ஆஞ்சநேயர், தனிக்கோவிலில் இருக்கிறார். இரு கைகளையும் கூப்பி வணங்கியபடி இருக்கும் இவர், கையில் கதாயுதம் இல்லாமல், 'அஞ்சலி வரத ஆஞ்சநேயராக' காட்சி தருவது கூடுதல் சிறப்பு.
இக்கோவில் கும்பாபிஷேகம் நடந்து 27 ஆண்டுகளாகும் நிலையில், கோவிலை புனரமைத்து கும்பாபிஷேகம் செய்ய வேண்டும் என பக்தர்கள் எதிர்பார்த்தனர்.
இதையடுத்து, 80 லட்சம் ரூபாய் மதிப்பில் கோவில் புனரமைக்கப்பட்டது.தொடர்ந்து கோவிலின் கும்பாபிஷேக விழா, வரும் 28ம் தேதி, காலை 9:30 மணிக்கு நடைபெற உள்ளது.
இதற்கான பணிகளில் கோவில் நிர்வாகத்தினர் மற்றும் பக்தர்கள் ஈடுபட்டுள்ளனர்.
Hindusthan Samachar / vidya.b