Enter your Email Address to subscribe to our newsletters


சென்னை, 25 ஜனவரி (ஹி.ச.)
மொழிப்போர் தியாகிகள் தாளமுத்து மற்றும் நடராசன் உயிர்நீத்ததே அன்றைய காங்கிரஸ் ஆட்சியின் காவல்துறை அடக்குமுறையால்தான் என்று பாஜக மாநில இளைஞரணி தலைவர் எஸ்.ஜி.சூர்யா எக்ஸ் தளத்தில் தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள பதிவில் குறிப்பிட்டுள்ளதாவது,
யார் காரணமோ, அதே காங்கிரசுடன் இன்று இணக்கமான கூட்டணி வைத்துக்கொண்டு, தியாகிகளுக்கு சிலை திறப்பது திமுகவின் சந்தர்ப்பவாத அரசியல் நாடகம்.
காங்கிரஸ் செய்த கொடுமைகளை வசதியாக மறைத்துவிட்டு, இன்று அதே காங்கிரஸ் கட்சியினரை அருகில் வைத்துக்கொண்டு விழா எடுப்பது அந்தத் தியாகிகளுக்குச் செய்யும் பச்சை துரோகம்.
முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்களே, கூட்டணி தர்மம் என்ற பெயரில் தியாகிகளின் மரணத்திற்குக் காரணமானவர்களோடு கைக்கோர்ப்பதுதான் உங்கள் திராவிடமாடல் ஆட்சியா? இது தியாகிகளின் தியாகத்தை கொச்சைப்படுத்தும் செயல் என்று அவர் அந்த பதிவில் குறிப்பிட்டுள்ளார்.
Hindusthan Samachar / P YUVARAJ