20 ஓவர் உலக கோப்பை கிரிக்கெட் தொடரிலிருந்து வங்கதேச அணி அதிகாரப்பூர்வமாக வெளியேற்றம்
துபாய், 25 ஜனவரி (ஹி.ச.) இந்தியாவில் நடைபெறவுள்ள இருபது ஓவர் உலக சாம்பியன்ஷிப் கிரிக்கெட் தொடரிலிருந்து வங்காள தேச அணியினர் திட்டமிட்டபடி பங்கேற்க இயலாமல் அதிகாரப்பூர்வமாக விலகியுள்ளனர் என்ற செய்தி கசிந்துள்ளது. வங்கதேசம் தொடரில் இருந்து பின்வாங்
20 ஓவர் உலக கோப்பை கிரிக்கெட் தொடரிலிருந்து வங்கதேச அணி அதிகாரப்பூர்வமாக வெளியேற்றம்


துபாய், 25 ஜனவரி (ஹி.ச.)

இந்தியாவில் நடைபெறவுள்ள இருபது ஓவர் உலக சாம்பியன்ஷிப் கிரிக்கெட் தொடரிலிருந்து வங்காள தேச அணியினர் திட்டமிட்டபடி பங்கேற்க இயலாமல் அதிகாரப்பூர்வமாக விலகியுள்ளனர் என்ற செய்தி கசிந்துள்ளது.

வங்கதேசம் தொடரில் இருந்து பின்வாங்கியதற்கான முக்கிய காரணம் பாதுகாப்பு குறைபாடே ஆகும்.

ஆகையால் அவர்களுக்கு பதிலாக ஸ்காட்லாந்து அணி உலகக்கோப்பையில் விளையாடும் என்று சர்வதேச கிரிக்கெட் வாரியம் (ஐசிசி) அறிவித்துள்ளது.

ஸ்காட்லாந்து கிரிக்கெட் வாரியம் இந்த வாய்ப்பினை கையில் எடுத்தால் மட்டுமே இது உறுதியாகும்.

வெகுவிரைவில் இது பற்றிய அறிவிப்பு வெளிவரும் என எதிர்பார்க்கப்படுகிறது.

Hindusthan Samachar / JANAKI RAM