Enter your Email Address to subscribe to our newsletters

புதுடெல்லி, 25 ஜனவரி (ஹி.ச.)
இந்திய ராணுவத் தளபதி ஜெனரல் உபேந்திர திவேதி இன்று (ஜனவரி 25) புது டெல்லியில் அமெரிக்க ராணுவச் செயலாளர் டேனியல் பி. டிரிஸ்காலைச் சந்தித்தார்.
இது குறித்து இந்திய ராணுவத்தின் கூடுதல் பொதுத் தகவல் இயக்குநரகம் இன்று எக்ஸ் தளத்தில் வெளியிட்ட பதிவில் கூறியிருப்பதாவது,
அமெரிக்க ராணுவச் செயலாளர் திரு. டேனியல் பி. டிரிஸ்கால், ராணுவத் தளபதி ஜெனரல் உபேந்திர திவேதியைச் சந்தித்தார். இருதரப்பு பாதுகாப்பு ஒத்துழைப்பை வலுப்படுத்துவது, ராணுவங்களுக்கு இடையேயான உறவுகளை ஆழப்படுத்துவது, மற்றும் உலக அமைதி மற்றும் பாதுகாப்பிற்கான இரு ராணுவங்களின் பகிரப்பட்ட உறுதிப்பாட்டை வலுப்படுத்துவது ஆகியவை குறித்து இந்த விவாதங்கள் கவனம் செலுத்தின, என்று தெரிவித்துள்ளது.
கடந்த ஜனவரி 13 அன்று, அமெரிக்க வெளியுறவுச் செயலாளர் மார்கோ ரூபியோ, வெளியுறவுத் துறை அமைச்சர் எஸ். ஜெய்சங்கருடன் தொலைபேசியில் உரையாடினார். அப்போது, சிவில் அணுசக்தி, வர்த்தக விவாதங்கள் மற்றும் இந்தோ-பசிபிக் பிராந்திய பாதுகாப்பு உள்ளிட்ட முக்கிய ஒத்துழைப்புப் பகுதிகளை அவர்கள் ஆய்வு செய்தனர்.
வர்த்தகம், முக்கிய கனிமங்கள், அணுசக்தி ஒத்துழைப்பு, பாதுகாப்பு மற்றும் எரிசக்தி குறித்து விவாதிக்கப்பட்டது. இவை மற்றும் பிற விஷயங்கள் குறித்து தொடர்பில் இருக்க ஒப்புக்கொண்டோம் என்று அந்த அழைப்பிற்குப் பிறகு ஜெய்சங்கர் கூறினார்.
இந்த உரையாடலின் போது, இந்தியாவின் அணுசக்தி கட்டமைப்பின் ஒரு பகுதியாக உள்ள, சமீபத்தில் இயற்றப்பட்ட 'இந்தியாவை மாற்றுவதற்கான நிலையான அணுசக்திப் பயன்பாடு மற்றும் மேம்பாட்டு மசோதா'வை இயற்றியதற்காக இந்தியாவிற்கு ரூபியோ வாழ்த்து தெரிவித்தார் என்று அமெரிக்காவின் முதன்மை துணை செய்தித் தொடர்பாளர் டாமி பிக்காட் தெரிவித்திருந்தது குறிப்பிடத்தக்கது.
இந்த நிலையில் இந்திய ராணுவத் தளபதி ஜெனரல் உபேந்திர திவேதியுடன் அமெரிக்க ராணுவச் செயலாளர் டேனியலின் சந்திப்பு முக்கியத்துவம் வாய்ந்ததாக பார்க்கப்படுகிறது.
Hindusthan Samachar / vidya.b